இ – பாஸ்போர்ட் தொடர்பான தகவலை மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
New Delhi: பாஸ்போர்ட்டை நவீனப்படுத்தி இ – பாஸ்போர்ட்டாக வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. முதல்கட்டமாக இது 2.20 கோடி பேருக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முறையில் சாதாரண பாஸ்போர்ட்டில் சிப் ஒன்று பொருத்தப்படும். இது பயன்பாடு மற்றும் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் இருக்கும் என மத்திய அரசு கூறியுள்ளது.
சம்பந்தப்பட்ட பாஸ்போர்ட் தாரர்களின் விவரங்கள் அனைத்து டிஜிட்டல் வடிவில் இந்த சிப்பினுள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். இந்த தகவலை மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கர் தெரிவித்துள்ளார்.
இதற்காக நாசிக்கில் செயல்பட்டு வரும் India Security Press (ISP) – இந்தியா செக்யூரிட்டி ப்ரஸிடம் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாசிக்கில் எலக்ட்ரானிக் சிப்புகள் தயார் செய்யப்பட்டவுடன் அவை பயன்பாட்டிற்கு வரவுள்ளன.