Read in English
This Article is From Oct 28, 2018

‘மத்தியிலும் மாநிலத்திலும் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டியது பாஜக தான்!’- நிதின் கட்கரி

‘இந்தியாவில் ஒரே குடும்ப ஆட்சி தொடர்ந்து வந்ததால், ஜனநாயகம் என்பது இல்லாமல் இருந்தது

Advertisement
நகரங்கள்

நம்மை ஆட்சி செய்தவர்கள் ஏழைகளுக்கு உதவாமல் அவர்களின் குடும்பங்களுக்கே அனைத்தையும் செய்தனர், கட்கரி

Highlights

  • பாஜக கொள்கையின் அடிப்படையில் செயல்படுகிறது, கட்கரி
  • வாஜ்பாய்தான் பாஜக-வின் மிகப் பெரிய தலைவர், கட்கரி
  • ஆனால் அவரை முன்னிருத்தி நாங்கள் அரசியல் செய்யவில்லை, கட்கரி
Hyderabad:

மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஐதராபாத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, ‘இந்தியாவில் ஒரே குடும்ப ஆட்சி தொடர்ந்து வந்ததால், ஜனநாயகம் என்பது இல்லாமல் இருந்தது. அதை மாற்றியது பாஜக தான்' என்று பேசியுள்ளார்.

அவர் தொடர்ந்து பேசுகையில், ‘பாஜக என்பது ஒரு குடுபத்தின் கட்சியல்ல. நாங்கள் ஜாதி, மதம் மற்றும் மொழி அடிப்படையில் அரசியல் செய்யவில்லை. எங்கள் கட்சியின் மிகப் பெரும் தலைவர் அடல் பிகாரி வாஜ்பாய்தான். ஆனால், அவரையோ அத்வானியையோ மட்டும் முன் வைத்து நாங்கள் அரசியல் செய்ததில்லை. இன்று பிரதமர் நரேந்திர மோடியும் அமித்ஷாவும் தலைமை பொறுப்பு வகிக்கின்றனர். தொடர்ந்து எங்கள் கட்சியின் தலைமை என்பது மாறிக் கொண்டே இருக்கும். ஆனால், எப்போதும் பாஜக ஒரு நபரின் பெயரை வைத்து அரசியலில் ஈடுபட்டதில்லை. எங்கள் கட்சி கொள்கையின் அடிப்படையில் மட்டுமே செயல்படும்' என்று உரையாற்றினார்.

அவர் தொடர்ந்து, ‘நம் நாட்டில் முன்னரெல்லாம் ஒரு பிரதமர் தான் இன்னொரு பிரதமரின் தந்தையாக இருந்தார். அதேபோலத் தான் மாநிலங்களிலும் ஒரு முதல்வர் தான் இன்னொரு முதல்வரின் தந்தையாக இருந்தார். ஜனநாயகம் என்பது இல்லாமலேயே இருந்தது. நம்மை ஆட்சி செய்தவர்கள் ஏழைகளுக்கு உதவாமல் அவர்களின் குடும்பங்களுக்கே அனைத்தையும் செய்தனர். இந்த நிலையை மாற்றியது பாஜக தான்' என்று கூறினார்.

Advertisement
Advertisement