Read in English
This Article is From Jan 23, 2019

பீக் நேர மக்கள் கூட்டத்தை குறைக்க டொக்கியோவின் அடடே திட்டம்

பீக் நேரங்களை தவிர்த்து சில மணி நேரங்களுக்கு முன் மெட்ரோ ரெயிலை பயன்படுத்துவோர்களுக்கு இலவச உணவு வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.

Advertisement
விசித்திரம் Translated By

பீக் நேர கூட்டத்தை குறைக்க பல திட்டங்களை டொகியோ அறிவித்துள்ளது

டொக்யோவில் மெட்ரோ ரெயிலை தினமும் 7.2 மில்லியன் மக்கள் பயன்படுத்துகின்றனர். வேலைக்கு செல்பவர்கள் தான் இதில் அதிகம். இதனால், மெட்ரோவில் கூட்டம் அலைமோதும். அதுவும் பீக் நேரங்களில் மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காது இருக்கும்.

இந்த பீக் நேர கூட்டத்தை குறைக்க டொக்யோ மெட்ரோ நிர்வாகம் புதுமையான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பீக் நேரங்களை தவிர்த்து சில மணி நேரங்களுக்கு முன் மெட்ரோ ரெயிலை பயன்படுத்துவோர்களுக்கு இலவச உணவு வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.

2000 பேர் பீக் நேரங்களுக்கு முன் மெட்ரோ ரெயிலை உபயோகித்தால், டெம்புரா என்னும் உணவு இலவசமாக வழங்கப்படவுள்ளது.

Advertisement

அதுவே 2500 உபயோகித்தால், சொபா வழங்கப்படுகிறது.

3000 பேருக்கு மேல் பீக் நேரங்களுக்கு முன் மெட்ரோவை உபயோகித்தால், சொபா மற்றும் டெம்புரா வழங்கப்படுகிறது. இதன் மூலம் பீக் நேரங்களில் கூட்டம் குறையும் என டொக்யோ மெட்ரோ நிர்வாகம் எண்ணுகிறது.

Advertisement

கிழக்கு டொக்கியோவையும் சிபாவையும் இணைக்கும் டொசாய் லைன் தான் மக்கள் கூட்டத்தால் அதிகம் பாதிக்கப்படுகிறது. இந்த லைனில் காலை 7.50 முதல் 8.50 –க்குள் 76000 பயணிகள் பயணிக்கின்றன. இது, 199 சதவிகிதம் அதிகமாகும்.

அடுத்த ஆண்டு டொக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைப்ப்பெறவுள்ளது. அதற்குள் இந்த பீக் நேர மக்கள் கூட்டத்தை குறைக்க ஜப்பானிய அரசு பல திட்டங்களை வகுக்கிறது.

Advertisement