This Article is From Dec 14, 2019

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் கனமழை! - 2 நாட்களுக்கு நீடிக்க வாய்ப்பு!

தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்றைய தினம் தெரிவித்திருந்தது. 

Advertisement
தமிழ்நாடு Edited by

6 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் லேசான முதல் கனமழை பெய்து வருகிறது. 

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில், கிண்டி, அடையார், திருவான்மியூர், தேனாம்பேட்டை, தி.நகர், கோடம்பாக்கம், தரமணி, மயிலாப்பூர், தாம்பரம், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. 

சென்னையை அடுத்த, திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் மிதமான மழை பெய்தது. கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை, சோழவரம், செங்குன்றம் உள்ளிட்ட இடங்களிலும் மிதமான மழை பெய்து வருகிறது.

இதேபோல், தஞ்சாவூர் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. தஞ்சாவூர், வல்லம், நாஞ்சிக்கோட்டை, சூரக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. 

Advertisement

திருச்சியில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. மேலும் புதுக்கோட்டையில் மிதமான மழை பெய்து வருகிறது. புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி சுற்றுவட்டார இடங்களில் மிதமான மழை பெய்து  வருகிறது. கரூர் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. 

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. திருப்பரங்குன்றம், அவனியாபுரம், வில்லாபுரம், சிந்தாமணி சாமநத்தம் உள்ளிட்ட இடங்களில் அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது.

Advertisement

முன்னதாக, தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்றைய தினம் தெரிவித்திருந்தது. 

மேலும், அடுத்த 48 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் தெரிவித்திருந்தது. 

Advertisement