This Article is From Dec 20, 2019

டெல்லியின் சில இடங்களில் நில நடுக்கம்! ஒரு நிமிடமாக அதிர்வுகள் நீடித்ததால் பதற்றம்!!

NDTV தொலைக்காட்சி அலுவலகத்தில் மின் விளக்குகள் நில நடுக்கம் காரணமாக சில விநாடிகள் அதிர்ந்தன.

டெல்லியில் ஏற்பட்ட நில நடுக்கம் சில விநாடிகள் நீடித்தது.

New Delhi:

டெல்லியின் சில இடங்களில் இன்று நில நடுக்கம் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக நில அதிர்வுகள் சுமார் ஒரு நிமிடம் வரைநீடித்தது. 

ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் பகுதியை மையமாக கொண்டு இன்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.3 ஆக பதிவாகியிருந்தது. 

இதன் தொடர்ச்சியாக டெல்லியில் நில நடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் உண்டான அதிர்வுகள் ஒரு நிமிடம் நீடித்தன. 

NDTV தொலைக்காட்சி அலுவலகத்தில் மின் விளக்குகள் நில நடுக்கம் காரணமாக சில விநாடிகள் அதிர்ந்தன. 

நில அதிர்வு ஏற்பட்டதை தொடர்ந்து ஏராளமானோர் தங்களது வீடுகளை விட்டு வெளியேறினர். இதனால் ஏற்பட்ட பொருள் மற்றும் உயிர்ச் சேதம் குறித்த தகவல்கள் உடனடியாக வெளிவரவில்லை. 

டெல்லியின் நில அதிர்வு தொடர்பாக வீடியோக்கள் பல ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு வருகிறது. 

.

டெல்லியை சுற்றியுள்ள குர்கான், நொய்டா, ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

.