This Article is From Jul 22, 2018

சேலம் , தர்மபுரி சுற்றுவட்டாரங்களில் நில அதிர்வு!

சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் இன்று காலை 7.40 முதல் 7.50 மணியளவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது

சேலம் , தர்மபுரி சுற்றுவட்டாரங்களில் நில அதிர்வு!

சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் இன்று அதிகாலை நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. சேலம், ஓமலூர், மேச்சேரி, மேட்டூர், கமலாபுரம், ஏற்காடு ஆகிய பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. காலை 7.40 முதல் 7.50 மணியளவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

மக்கள் நில அதிர்வு ஏற்பட்டதால், வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். தர்மபுரி மாவட்டம், ஏரியூர் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. 

சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் இருக்கும் நில  அதிர்வு பதிவு செய்யும் கருவி பழுதானதால், இந்த நில அதிர்வை பதிவு செய்ய முடியவில்லை என்று கூறப்படுகிறது. அதனால் இதன் வீரியம் என்ன என்பதும் தெரியவில்லை. 

இந்த நில அதிர்வால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

.