டெல்லியில் மீண்டும் லேசான நிலநடுக்கம்! - அச்சத்தில் மக்கள்!
New Delhi: டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மீண்டும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 2.7 ஆக பதிவான இந்த நில நடுக்கத்தால் மக்கள் பீதியடைந்தனர். ஏற்கனவே நேற்று மாலையில் ரிக்டர் 3.5 ஆக லேசனான நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், தற்போது மீண்டும் ஏற்பட்டுள்ளது.
முன்னதாக, நேற்று ஏற்பட்ட நில நடுக்கத்தை உணர முடிந்ததாக டெல்லி வாசிகள் பலரும் தங்கள் சமூகவலைத்தள பக்கங்களில் பதிவிட்டிருந்தனர். எனினும், இந்த நில நடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக வீடுகளுக்குள்ளேயே மக்கள் முடங்கி கிடக்கும் நிலையில், அடுத்தடுத்த நாட்கள் ஏற்பட்டுள்ள நில நடுக்கத்தால் அச்சம் அடைந்தனர்.
நிலநடுக்கம் தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, டெல்லியில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. அனைவரும் நலமாக இருப்பார்கள் என நம்புகிறேன். அனைவரின் நலனுக்காகவும் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் என்று பதிவிட்டிருந்தார்.