This Article is From Feb 12, 2019

சென்னையில் இன்று காலை நிலநடுக்கமா..!?

இன்று காலை சுமார் 7 மணி அளவில், வங்காள விரிகுடா பகுதியில் 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்

சென்னையில் இன்று காலை நிலநடுக்கமா..!?

பலர் ட்விட்டரில், இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டதை உணர்ந்ததாக பதிவுகள் போட்டுள்ளனர்

இன்று காலை சுமார் 7 மணி அளவில், வங்காள விரிகுடா பகுதியில் 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக, இந்திய வானியல் துறை தகவல் தெரிவித்துள்ளது. இதனால் சென்னையிலும் இன்று காலை நிலநடுக்கம் உணரப்பட்டதாக சொல்லப்படுகிறது.

பலர் ட்விட்டரில், இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டதை உணர்ந்ததாக பதிவுகள் போட்டுள்ளனர். மிகவும் குறைந்த ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் என்பதால், பரவலாக அதை உணர முடியாது என்றும் வல்லுநர்கள் கருத்து கூறியுள்ளனர்.

ஒரு ட்விட்டர் பயனர், 'இன்று நிலநடுக்கத்தை நான் உணர்ந்தேன். போரூர் பகுதிக்கு அருகில்தான் நான் உள்ளேன். நான், காலை 6:55 மணிக்கு நிலநடுக்கத்தை உணர்ந்தேன்' என்றுள்ளார்.

இன்னொருவர், 'நான் டைடல் பார்க்கில் இருக்கிறேன். யாராவது டைடல் பார்க் பகுதியில் நிலநடுக்கத்தை உணர்ந்தீர்களா?' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

.