மாலை சரியாக 4.35 - க்கு டெல்லியில் சில வினாடிகள் நில அதிர்வு நீடித்தது.
New Delhi: பாகிஸ்தானின் லாகூர் நகர் அருகே ஏற்பட்ட நில நடுக்கம் டெல்லி உள்பட வட மாநிலங்களில் அதிர்வாக உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக இந்த நில நடுக்கம் பதிவானது. இதனால் உயிர்ச் சேதம் ஏதும் இந்தியாவில் ஏற்படவில்லை.
டெல்லியில் மாலை சரியாக 4.35-க்கு சில விநாடிகள் வரை இந்த நில நடுக்கம் உணரப்பட்டது. வட மாநிலங்களான பஞ்சாப், உத்தரகாண்ட், காஷ்மீர் மாநில மக்களும் நில அதிர்வை உணர்ந்துள்ளனர்.
இந்த நில நடுக்கமானது வட மாநில மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானை பொருத்தளவில் இஸ்லாமாபாத், பெஷாவர், ராவல்பிண்டி, லாகூர் ஆகிய நகரங்களிலும் நில நடுக்கம் உணரப்பட்டிருக்கிறது. இருப்பினும், இதனால் ஏற்பட்டிருக்கும் பொருள், உயிர்ச்சேதம் குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
நில அதிர்வை உணர்ந்ததன் அனுபவத்தை சிலர் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
.
With inputs from PTI