New Delhi: டெல்லி, லக்னோ உள்ளிட்ட வட இந்திய பகுதியில் இன்று நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்தனர்.
நேபாளத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், ரிக்டர் அளவுகோலில் இதன் அளவு 5.1 ஆக பதிவானது என்றும் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நில அதிர்வைத் தொடர்ந்து உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் மக்கள் வீட்டை விட்டு வெளியே தலைதெறிக்க ஓடினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு காணப்பட்டது.
நில அதிர்வு ஏற்பட்ட சில நிமிடங்களில் அதுபற்றிய தகவல்களை பொதுமக்கள் சமூக வலைதளங்களில் பகிரத் தொடங்கினர்.
டெல்லியின் சில பகுதிகளில் நிலடுக்கம் உணரப்பட்டதாகவும், டெல்லி - தேசிய தலைநகர் பகுதிகளிலும் இந்த அதிர்வை மக்கள் உணர்ந்ததாகவும், தனியார் வானிலை ஆய்வு மையமான ஸ்கைமெட் தெரிவித்துள்ளது.
நில நடுக்கத்தால் என்னமாதிரியான இழப்புகள் ஏற்பட்டுள்ளன என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.