புயல் பாதித்த மாவட்டங்களில் மின் கட்டணத்தை ரத்து செய்வது தொடர்பாக முதல்வருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மின்கம்பங்களை சீர் செய்யும் பணிகளை அமைச்சர்கள் தங்கமணி, விஜயபாஸ்கர், கருப்பணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கமணி, மின் சீரமைப்புக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் தேவைக்கு அதிகமாகவே உள்ளது என்றார்.
புயல் பாதித்த பகுதிகளில் ஒரு வாரத்தில் 100% மின்விநியோகம் வழங்கப்படும் என்றும் மின் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரமாக்க முடியாவிட்டாலும், அவர்களின் கூலியை உயர்த்துவது தொடர்பாக பரிசீலனை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், புயல் பாதித்த மாவட்டங்களில் மின் கட்டணத்தை ரத்து செய்வது தொடர்பாக முதலமைச்சருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.