This Article is From Oct 24, 2018

தெலங்கானா தேர்தல் நடவடிக்கைகளில் திருப்தி: தேர்தல் ஆணையம் தகவல்

ஐதராபாதிற்கு இந்திய தலைமை தேர்தல் அதிகாரி ஓ.பி.ராவத் தலைமையில் ஆய்வுக் குழு, சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து சோதனை செய்ய சென்றிருந்தது

தெலங்கானா தேர்தல் நடவடிக்கைகளில் திருப்தி: தேர்தல் ஆணையம் தகவல்

திங்கள் கிழமை, தேர்தல் ஆணைய ஆய்வுக் குழு, பிரதான அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Hyderabad:

தெலங்கானா தலைநகர் ஐதராபாதிற்கு இந்திய தலைமை தேர்தல் அதிகாரி ஓ.பி.ராவத் தலைமையில் ஆய்வுக் குழு, சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து சோதனை செய்ய சென்றிருந்தது. ஆய்வுக்குப் பின்னர் தேர்தல் ஆணையம், ‘தேர்தலுக்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளில் திருப்தி இருக்கிறது' என்று தெரிவித்துள்ளது. 

இந்த ஆய்வு குறித்து வெளியிடப்பட்ட அதிகாரபூர்வ அறிக்கையில், ‘ஆய்வின் போது, தேர்தலின் போது அதிகாரிகளின் பணி என்ன என்பது குறித்து தெரிவிக்கப்பட்டது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை சோதனை செய்து காண்பிக்கப்பட்டது. மாவட்ட வாரியாக இருக்கும் எஸ்.பி மற்றும் ஆட்சியர்கள் சட்ட ஒழுங்கு குறித்து ஆய்வுக் குழுவுக்கு தெளிவுபடுத்தினார்கள்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வு முடிந்த பின்னர் தேர்தல் ஆணைய அதிகாரிகள், தேர்தலையொட்டி எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து திருப்தி தெரிவித்தனர். குறிப்பாக மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் எஸ்.பி-க்களுக்கு சட்ட ஒழுங்கு எவ்வளவு முக்கியம் என்பதையும் தெளிவுபடுத்தினார்கள் தேர்தல் ஆணைய அதிகாரிகள். 

திங்கள் கிழமை, தேர்தல் ஆணைய ஆய்வுக் குழு, பிரதான அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

.