மதிப்பெண் பட்டியலை ஐ.ஐ.டி. மெட்ராஸ் வெளியிட்டிருக்கிறது.
GATE 2019 தேர்வை எழுதியவர்களின் மதிப்பெண் பட்டியலை ஐ.ஐ.டி. மெட்ராஸ் வெளியிட்டுள்ளது. கடந்த 15-ம்தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
எம்.டெக் உள்ளிட்ட படிப்புகளில் சேர விரும்புவோருக்கு GATE 2019 மதிப்பெண்கள் முக்கியத்துவம் வாய்ந்தது. இதன் அடிப்படையில்தான் எம்.டெக் உள்ளிட்ட படிப்புகளுக்கான அட்மிஷன் நடைபெறுகிறது.
GATE 2019 தேர்வில் வெற்றி பெற்றவர்கள் தங்களது மதிப்பெண் பட்டியலை ஆன்லைனில் டவுண்லோட் செய்து கொள்ளலாம்.
முதலில் gate.iitm.ac.in. என்ற இணைய தளத்திற்கு செல்ல வேண்டும்.
அதில் GATE 2019 ஸ்கோர் கார்டு என்ற லிங்க்கை க்ளிக் செய்ய வேண்டும்.
மூன்றாவதாக ரிஜிஸ்ட்ரேஷன் விவரங்களான என்ரோல்மென்ட் ஐ.டி./மின்னஞ்சல், பாஸ்வேர்டு, கேப்ச்சியா உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்க வேண்டும்.
இதனை அளித்தால் நம்முடைய அட்மிட் கார்டை வியூ செய்து கொள்ளலாம்.
GATE 2019 தேர்வின் மதிப்பெண்கள் அடுத்து வரும் 3 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.