This Article is From Jul 27, 2020

மகாராஷ்டிராவில் பக்ரீத் கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள்! மாநில தலைவர்கள் முதல்வருக்கு கடிதம்!!

மும்பையில் ஆடுகளின் விலை முன்பு ரூ .20,000 லிருந்து இப்போது ரூ .30,000 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிராவில் பக்ரீத் கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள்! மாநில தலைவர்கள் முதல்வருக்கு கடிதம்!!

மகாராஷ்டிரா அரசு இந்த ஆண்டு பக்ரீத்தை விமரிசையாக அல்லாமல் அடையாளமாக கொண்டாட வேண்டும் என்று கேட்டுள்ளது.

Mumbai:

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 14 லட்சத்தினை நெருங்கிக் கொண்டிருக்கக்கூடிய நிலையில், பக்ரீத் பண்டிகை கொண்டாட்டங்களும் தொடங்கிவிட்டன. இதன் காரணமாக மகாராஷ்டிரா அரசாங்கம் புதிய வழிகாட்டுதல் நெறிமுறையை வழங்கியுள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிரா அரசின் புதிய நெறிமுறைகளை மறு பரிசீலனை செய்யுமாறு மகாராஷ்டிரா காங்கிரஸ் கட்சி தலைமை முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளது.

தாக்கரேவின் சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டாக மாநிலத்தில் கட்சி ஆட்சி செய்யும் காங்கிரஸ் தலைவர் நசீம் கான், வழிகாட்டுதல்களை மறுஆய்வு செய்ய அமைச்சர்களின் அவசர கூட்டத்தை கூட்டுமாறு முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை அரசாங்கம் வெளியிட்ட ஸ்டாண்டர்ட் ஆப்பரேட்டிங் நடைமுறைகளின்படி, பலியிடப்பட்ட ஆடுகளை ஆன்லைனில் வாங்குவது மற்றும் விற்பது மற்றும் ஈத் அல்-ஆதா என்றும் அழைக்கப்படும் பக்ரீத் குறியீட்டு கொண்டாட்டம் ஆகியவற்றிற்கு தடை ஏதும் இல்லையென தெரிவித்துள்ளது.

ஆனால், அரசின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் தலைவர் நசீம் ஆட்சேபனை தெரிவித்துள்ளார். மக்கள் அனைவரும் ஆன்லைனில் மட்டுமே ஆடுகளை வாங்குவது சாத்தியமில்லை என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இது மத உணர்வுகளை புண்படுத்தும் என்றும் இது குறித்து அவசர கூட்டத்தினை கூட்ட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மும்பையில் உள்ள தியோனார் சந்தை ஆடுகளை வாங்குவதற்கும் விற்பதற்குமான மிகப்பெரிய சந்தையாகும். ஆனால், தற்போது சந்தை கொரோனா தொற்று பரவல் காரணமாக மூடப்பட்டுள்ளது. ஆன்லைனில் ஆடுகளை வாங்கவும் விற்கவும் அரசாங்கம் மக்களை கேட்டுக் கொண்டாலும், அவர்கள் பயன்படுத்தக்கூடிய எந்த ஆன்லைன் போர்ட்டலையும் தெளிவாகக் குறிப்பிடாததால் பலர் குழப்பமடைந்துள்ளனர். சமானிய மக்கள் பலர் இம்மாதியாக தொழில்நுட்பத்தினை பயன்படுத்துகின்ற அளவிற்கு தெளிவானவர்களாக இருப்பதில்லை.

மும்பையில் ஆடுகளின் விலை முன்பு ரூ .20,000 லிருந்து இப்போது ரூ .30,000 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

.