This Article is From May 25, 2020

காண்போர் மனதை கொள்ளை கொள்ளும் டெல்லி ஜாமா மசூதியின் எழில்மிகு தோற்றம்!!

ரமலான் சிறப்பு பிரார்த்தனையை முஸ்லிம்கள் அவரவர் வீடுகளிலேயே மேற்கொண்டனர். முன்னதாக நேற்று இதுதொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அவசிய தேவைக்கு மட்டுமே மக்கள் வெளியே வர வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.

காண்போர் மனதை கொள்ளை கொள்ளும் டெல்லி ஜாமா மசூதியின் எழில்மிகு தோற்றம்!!

கொரோனா முடக்கம் காரணமாக முஸ்லிம்கள் தங்களது ரமலான் சிறப்பு பிரார்த்தனையை மசூதிகளில் நிறைவேற்றவில்லை.

ஹைலைட்ஸ்

  • இந்தியாவின் மிகப்பெரும் மசூதிகளில் டெல்லி ஜாமா மசூதி முக்கியமானது
  • பொது முடக்கத்தால் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெறவில்லை
  • ட்ரோன் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது
New Delhi:

.

ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் டெல்லி ஜாமா மசூதி, கொரோனா முடக்கம் காரணமாக வெறிச்சோடி காணப்படுகிறது. இதனை வெவ்வேறு கோணத்தில் பிரபல புகைப்பட கலைஞர் சொஹைப் இல்யாஸ் படம் எடுத்துள்ளார். 

தற்போது இந்த போட்டோக்கள் வைரலாகி வருகின்றன. இன்று காலை 7.30 மணியளவில் இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. சொகைப் ஒரு திரைப்பட இயக்குனரும் ஆவார். 

புகைப்படம் எடுக்கப்பட்டபோது ஜாமா மசூதியின் தலைமை இமாம் சாஹி மற்றும் அவரது குடும்பத்தினர் மட்டுமே சிறப்பு பிரார்த்தனையை நிறைவேற்றியுள்ளனர்.

இந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ள சொகைப் இல்யாஸ், 'அனைவருக்கும் ஈத் முபாரக் வாழ்த்துக்களை தொவித்துக் கொள்கிறேன். ஜாமா மசூதி - வரலாற்று முக்கியத்துவம் மிக்க இடம். இந்த மசூதி காலை 7.30-க்கு புகைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் தலைமை மதகுரு சாஹி இமாம் மற்றும் அவரது குடும்பத்தினர் மட்டுமே பிரார்த்தனையை நிறைவேற்றுவதை காண முடிகிறது.' என்று கூறியுள்ளார். 
 
.

கொரோனா முடக்கம் காரணமாக முஸ்லிம்கள் தங்களது ரமலான் சிறப்பு பிரார்த்தனையை மசூதிகளில் நிறைவேற்றவில்லை. 

ரமலான் சிறப்பு பிரார்த்தனையை முஸ்லிம்கள் அவரவர் வீடுகளிலேயே மேற்கொண்டனர். முன்னதாக நேற்று இதுதொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அவசிய தேவைக்கு மட்டுமே மக்கள் வெளியே வர வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள். 
 
nvr7qfj

.

ஜாமா மசூதியில் சாஹி இமாம் மற்றும் அவருடன் சேர்ந்த 15 முதல் 16 பேர் தொழுகையை நிறைவேற்றுகின்றனர். சிறப்பு மிக்க ரமலான் பெருநாளில், ஏழை மக்களுக்கு முஸ்லிம்கள் முடிந்தவரை உதவி செய்ய வேண்டும் என்று சாஹி இமாம் கேட்டுக கொண்டுள்ளார். 

ஜாமா மசூதியை தவிர்த்து பதேபூர் சிக்ரி மற்றும் டெல்லியின் வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. 

.