This Article is From Mar 11, 2019

பொள்ளாச்சி கூட்டு பாலியல் விவகாரம்! - 8 பேர் கைது!

பொள்ளாச்சியில், சமூக வலைதளங்கள் வழியாக சிலர், 60க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி, ஆபாச படங்கள் எடுத்து மிரட்டியது குறித்து முதல்முறையாக மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் தனது அறிக்கையில் கடும் கண்டனம் தெரிவித்தார்

பொள்ளாச்சி கூட்டு பாலியல் விவகாரம்! - 8 பேர் கைது!

கோவையில் கல்லூரி மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Coimbatore, Tamil Nadu:

பொள்ளாச்சியில் ஏராளமான கல்லூரி மாணவிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய விவகாரத்தில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அந்த பெண்களை அவர்கள் 7 வருடங்களாக மிரட்டி வந்துள்ளனர் என்றும் என்டிடிவியிடம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக முதன்முதலாக கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொள்ளாச்சியில் ஒரு கும்பலால் 60க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு, மிரட்டப்பட்டு வந்துள்ளனர். போலீசார் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் நீதி மய்யம் இதனை கடுமையாக கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட கும்பலை வலைவீசிப்பிடித்த காவல்துறையினர் அவர்களிடமிருந்து மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் வீடியோவையும் கைப்பற்றியுள்ளனர். இந்த சம்பவத்தில் பல பெண்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும், ஒரே ஒரு பெண் மட்டுமே காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து போலீசார் கூறும்போது, இவர்கள் பெரும்பாலும் கூறிவைப்பது கல்லூரி மாணவிகளை தான். அவர்களிடம் முதலில் முகநூல் வழியாக நட்பாக பழகி பின்னர் வெளியில் இரவு நேர உணவிற்காக அழைத்து செல்கின்றனர். இப்படி அழைத்து செல்வதன் மூலம் முதலில் அந்த மாணவிகளின் நம்பிக்கையை அவர்கள் பெறுகின்றனர். பின்னர் அவர்களை பாலியில் ரீதியாக துன்புறுத்தப்படுகின்றனர் என்று அவர் கூறியுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள 8 பேரில் திருநாவுக்கரசு என்ற ஒருவர் மட்டும் மாணவி கொடுத்த புகார் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளார். இதில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 4 பேரின் மீது பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் அச்சுறுத்தல் உள்ளிட்ட பிரிவிகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்ற 4 பேர் மீது குண்டாஸ் சட்டம் போடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து கடும் கண்டனம் தெரிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், குற்றவாளிகள் ஆளும் அரசால் பாதுக்கப்பட்டு வருவதாக அதிமுகவை கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும், அதிமுக அரசில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

.