Read in English
This Article is From May 08, 2019

பாகிஸ்தானில் மசூதி அருகே குண்டுவெடிப்பு - 8 பேர் பலி!!

Blast in Lahore: குண்டுவெடிப்பு சம்பவம் 11-ம் நூற்றாண்டை சேர்ந்த மசூதி அருகே நடந்துள்ளது. தெற்காசியாவின் பிரமாண்ட மசூதிகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

Advertisement
உலகம் Edited by

Lahore Blast Today: பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று பாகிஸ்தான் கூறி வருகிறது.

Lahore:

பாகிஸ்தானின் பழமை வாய்ந்த மசூதி ஒன்றின் அருகே இன்று குண்டுவெடிப்பு நடந்துள்ளது. இதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். 20-க்கும் அதிகமானோருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. ரமலான் மாதத்தில் இவ்வாறான சம்பவம் நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

குண்டுவெடிப்பு சம்பவம் 11-ம் நூற்றாண்டை சேர்ந்த மசூதி அருகே நடந்துள்ளது. தெற்காசியாவின் பிரமாண்ட மசூதிகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது. 

பயங்கரவாத செயலில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தவர்களில் 3 பேர் பாதுகாப்பு படையை சேர்ந்தவர்கள். இந்த சம்பவம் தற்கொலைப்படை தாக்குதலாக இருக்கலாம் என கருதப்படுகிறது. 

Advertisement

பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறோம் என பாகிஸ்தான் கூறி வரும் நிலையில், அந்நாட்டில் மசூதி அருகே நடந்திருக்கும் இந்த தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement