விபத்து நடந்த இடத்தில் தான் திரிணாமூல் கவுன்சிலர் அலுவலகம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
ஹைலைட்ஸ்
- நாகேர்பஜாரில் தான் வெடி விபத்து நடந்துள்ளது
- வெடி விபத்துக்குக் காரணம் யாரென்று தெரியவில்லை
- 9 பேருக்கு பலத்தக் காயம் ஏற்பட்டுள்ளது
Kolkata: கொல்கத்தாவின் நகேர்பஜாரில் இன்று குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்தில் ஒரு 8 வயதுச் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். மேலும் 9 பேருக்காவது பலத்தக் காயம் ஏற்பட்டிருக்கும் என்று தகவல் கூறப்படுகிறது. பஜாரிலிருந்த 4 மாடி கட்டடத்துக்கு முன்னர் இந்த வெடி விபத்து நடந்துள்ளது. வெடி வெடித்தவுடன், கண்ணாடி மற்றும் உலோக துகல்கள் சிதறியதாக கூறப்படுகிறது. அது தான் மக்கள் காயமடைய காரணமாக இருந்துள்ளது. குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தவுடன், காயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர் அங்கு கூடியிருந்த மக்கள்.
முதலில் இது, காஸ் சிலிண்டர் மூலம் நடந்து விபத்தாக இருக்கக்கூடும் என்று காவல் துறை தரப்பு தகவல் தெரிவித்தது. ஆனால், விசாரணைக்குப் பின்னர் இது குறைந்த அளவில் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய வெடி மருந்துகளால் நடத்தப்பட்ட தாக்குதல் என்று தெரிவித்தது போலீஸ்.
இந்த விவகாரம் குறித்து திரிணாமூல் காங்கிரஸ் கவுன்சிலர் பஞ்சு ராய், ‘திரிணாமூலை, வங்கம் முழுவதும் தாக்கி வரும் கும்பல் தான் இந்த விபத்துக்குப் பின்னால் இருக்கிறது. இன்று அக்டோபர் 2. மகாத்மா காந்தியின் பிறந்த நாள். காந்தியைக் கொன்றது எந்தக் கும்பல் என்பது நமக்கு எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். அதே கும்பல், இந்தத் தாக்குதலுக்குப் பின்னாலும் இருந்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன்’ என்று கூறி பகீர் கிளப்பியுள்ளார். விபத்து நடந்த இடத்தில் தான் ராயின் அலுவலகம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
திரிணாமூல் தரப்பு, இந்த வெடி விபத்துக்கு, ஆர்.எஸ்.எஸ் தான் காரணம் என்று குற்றம் சாட்டியது. இந்நிலையில், பாஜக, திரிணாமூலின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.