தன்னுடைய பெற்றோருக்கு வார்த்தைகளை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை இந்த சிறுவனே கற்றுக் கொடுக்கிறார்.
Chennai: 8 வயதான நியல் தொகுலுவா என்ற சிறுவன் 106 மொழிகளில் பேசவும் எழுதவும் செய்வது பலருக்கும் வியப்பை அளித்துள்ளது. இண்டர்நெட் மற்றும் யூ டியூப் உதவியுடன் மொழிகளை கற்றுத் தேறியுள்ளான். சிறுவனின் தனித்துவமான திறமை பலரையும் வெகுவாக கரைந்துள்ளது.
சர்வதேச உச்சரிப்பு ஒலிப்பு முறைகளையும் கற்றுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து நியலிடம் பேசிய போது, “மொழிகளில் மீதான விருப்பம் என்பது எப்படி தொடங்கியது எனத் தெரியவில்லை. நான் 106 மொழிகளில் பேசவும் எழுதவும் முடியும். 10 மொழிகளில் சரளமாகப் பேசுவேன் தற்போது 5 மொழிகளைப் படித்து வருகிறேன்” என்று கூறுகிறார்.
தன்னுடைய பெற்றோருக்கு வார்த்தைகளை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை இந்த சிறுவனே கற்றுக் கொடுக்கிறார்.
நியலின் அப்பாவான சங்கர் நாராயணிடம் பேசியபோது, கடந்த ஆண்டு முதல் இண்டர்நெட் மூலமாக மொழிகளை கற்று வருவதாகவும். ஒரு மொழியை கற்றுத்தேறிய பின் அடுத்த மொழி என்று அடுத்தடுத்து ஆர்வமாக படித்து வருவதாகத் தெரிவிக்கிறார்.