Read in English
This Article is From May 19, 2019

தேர்தலை நீண்ட நாட்களாக நடத்தக்கூடாது: ஆணையத்திற்கு நிதிஷ் குமார் ஆலோசனை

Lok Sabha Elections Phase 7 2019: ஒருகட்ட தேர்தலுக்கு அடுத்தகட்ட தேர்தலுக்கும் இவ்வளவு பெரிய இடைவெளி தேவையில்லை என பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

Advertisement
இந்தியா Edited by

Highlights

  • பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பாட்னாவில் வாக்களித்தார்.
  • ஒவ்வொரு கட்ட தேர்தலுக்குமான இடைவெளி அதிகமாக இருக்கிறது என்றார்
  • கோராக்பூரில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்தயநாத் வாக்களித்தார்
New Delhi:

மக்களவைத் தேர்தலுக்கான 7வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது. இதில், காலையிலே உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் ஆகியோர் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கிய நிலையில், ஏழாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு 59 மக்களவைத் தொகுதிகளில் நடந்து வருகிறது. பீகாரில் 8, ஜார்கண்டில் 3, பஞ்சாப்பில் 13, மேற்கு வங்காளத்தில் 9, இமாசலபிரதேசத்தில் 4, மத்திய பிரதேசத்தில் 8, உத்தரபிரதேசத்தில் 13, சண்டிகரில் ஒன்று என 59 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடக்கிறது.

பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், பாட்னாவில் உள்ள ராஜ்பவன் பள்ளியில் அமைக்கப் பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒவ்வொரு கட்ட தேர்தலுக்கு இடையிலும் பெரும் இடைவெளி உள்ளது. தேர்தல் ஆணையம் தேர்தலை விரைந்து நடத்தி முடிக்க வேண்டும். கோடையில் அதிக வெயில் அடித்து வருவதால், அதுவே வாக்காளர்களுக்கும் வசதியாக இருக்கும்.

Advertisement

இவ்வளவு நீண்ட நாட்களாக தேர்தலை நடத்தக்கூடாது. ஒவ்வொரு கட்ட தேர்தலுக்கு இடையில் பெரும் இடைவெளி உள்ளது. இதுகுறித்து அனைத்து கட்சி தலைவர்களுக்கும் கடிதம் எழுத உள்ளேன் என்று அவர் கூறினார்.

யோகி ஆதித்யநாத்தின் கோட்டையான கோராக்பூரில், பாஜக சார்பில் போஜ்பூரி நடிகர் ரவி கிஷான் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட தேர்தல் தொடங்கி நடந்து வருகிறது. உலகின் மிக்பெரிய ஜனநாயக ஜனநாயக கடமையில் பங்கேற்கிறேன் என்பதில் பெருமை கொள்கிறேன். மக்கள் பொது நலனுக்காக மட்டுமே போட்டியிடுவபவர்கள் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவர் என்பதை மக்கள் தெளிவுபடுத்தியுள்ளனர் "என்று யோகி ஆதித்யநாத் வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கோராக்பூர் தொகுதியானது 5 முறை யோகி ஆதித்யாநாத் வெற்றி பெற்ற பாஜக கோட்டையாகவே திகழ்கிறது. எனினும், கடந்த இடைத்தேர்தலின் போது, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ்வாதி, ராஷ்டிரிய லோக் தளம் அகிய கட்சிகள் அங்கு அமைத்த மெகா கூட்டணி காரணமாக அங்கு பாஜக தோல்வியை சந்தித்தது.

Advertisement

உத்தரபிரதேசமே அதிகளவிலான உறுப்பினர்களை நாடாளுமன்றத்திற்கும் அனுப்பும் மாநிலமாகும், மாநிலத்தில் எங்கும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது என யோகி தெரிவித்துள்ளார்.

Advertisement