हिंदी में पढ़ें Read in English
This Article is From May 22, 2019

பாஜகவா, காங்கிரஸா, 3வது அணியா..?- புது ரூட் போடும் சரத் பவார்

கருத்துக் கணிப்புகள், மொத்தம் இருக்கும் 543 லோக்சபா தொகுதிகளில் 300-க்கு மேல் தேசிய ஜனநாயகக் கூட்டணி கைப்பற்றும் என்று தெரிவித்தன

Advertisement
இந்தியா Edited by

Highlights

  • கேசிஆர், பட்நாயக், ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோருடன் பவார் பேசியுள்ளார்
  • தே.ஜ.கூ-வுக்கு எதிராக பவார், காய் நகர்த்தி வருகிறார்
  • சந்திரபாபு நாயுடுவுடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் பவார்
Mumbai/ New Delhi:

இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளியான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெரும் என்று தெரிவிக்கின்றன. இருப்பினும், பாஜக-வுக்கு பெரும்பான்மை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டால், அதைத் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று காய் நகர்த்தி வருகிறார்கள் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள். இதில் மகாராஷ்டிராவின் மூத்த அரசியல்வாதியும் தேசியவாத காங்கிரஸின் தலைவருமான சரத் பவார் முக்கியமானவர். எதிர் முனைகளில் இருக்கும் எதிக்கர்ட்சிகளை ஓரணியில் கொண்டு வர அவர் முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. 

நமக்குக் கிடைத்த தகவல்படி சரத் பவார், தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவர் சந்திரசேகர் ராவ், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் மற்றும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோருடன் தொடர்பு கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. 

எதிர்கட்சித் தரப்புக்கு ஆட்சியமைக்கும் வாய்ப்பு கிடைத்தால், இவர்கள் அனைவரையும் ஓரணியில் கொண்டு வர சரத் பவார் முயன்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 

Advertisement

இதில் பவாருக்கு, சந்திரசேகர் ராவ் மற்றும் நவீன் பட்நாயக்கிடமிருந்து ஆதரவு வந்துள்ளதாக கூறப்படுகிறது. பவார், சந்திரபாபு நாயுடுவுடனும் தொடர்பில் இருப்பதாக தெரிகிறது. 

நாயுடு, தன் பங்குக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, உத்தர பிரதேச முக்கிய புள்ளிகளான மாயாவதி மற்றும் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோருடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். நேற்று அவர் கர்நாடக முதல்வர் குமாரசாமி மற்றும் தேவ கவுடா ஆகியோரையும் சந்தித்தார். 

Advertisement

இந்த அரசியல் கணக்கில், ஜெகன் மோகன் ரெட்டி மட்டும் இன்னும் சிக்கவில்லை என்று தெரிகிறது. பாஜக தரப்பும், ரெட்டியை தங்கள் வசம் இழுக்க முயன்று வருகின்றது. 

ஞாயிற்றுக் கிழமை வெளியான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள், மொத்தம் இருக்கும் 543 லோக்சபா தொகுதிகளில் 300-க்கு மேல் தேசிய ஜனநாயகக் கூட்டணி கைப்பற்றும் என்று தெரிவித்தன. காங்கிரஸ் கூட்டணி, 122 இடங்களையும், மற்றவர்கள் 114 இடங்களையும் பிடிப்பர் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. 

Advertisement