வெள்ளிக்கிழமை ரூ. 129.51 கோடி பணத்தை மீட்தாக தெரிவித்துள்ளார்.(Representational)
Chennai: தமிழகத்தில் கணக்கில் வராத பணம், தங்கம் மற்றும் மதிப்புமிக்க பொருட்கள் ரூ.552.23 கோடி ரூபாயை கைப்பற்றியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது,
முதன்மை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சஹூ வெள்ளிக்கிழமை வரை ரூ. 129.51 கோடி பணத்தை மீட்தாக தெரிவித்துள்ளார்.
தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள், மது , லேப்டாப், மற்றும் துணிவகைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதன் நடப்பு மதிப்பு ரூ.422.72 கோடியாகும். ஏப்ரல் 18ம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான தயாரிப்புகளில் 5,874 மண்டல குழுக்கள் தேர்தல் தொடர்பான வேலைகளைப் பார்க்க உருவாக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.
7,225 வாக்குச்சாவடிகள் பதட்டத்துக்குரியவை என்று அடையாளம் காணப்பட்டு கண்காணிப்பு கேமராக்களை பயன்படுத்தி அவற்றை கண்காணிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
மத்திய ராணுவப் படைகளும் நுண்ணறிவு பார்வையாளர்களும் இந்த வாக்குச் சாவடிகளில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவார்கள்.