বাংলায় পড়ুন हिंदी में पढ़ें Read in English
This Article is From Dec 02, 2018

வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ள அறையில், சிசிடிவி தடைபட்டது: தேர்தல் ஆணையம் ஒப்புதல்

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் மின்னனு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் ஏற்பட்ட மின்தடை காரணமாக சிசிடிவி கேமராக்கள் தடைபட்டுள்ளது

Advertisement
இந்தியா Posted by
New Delhi:

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் மின்னனு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் ஏற்பட்ட மின்தடை காரணமாக ஒரு மணி நேரமாக சிசிடிவி கேமராக்கள் தடைபட்டுள்ளது என தேர்தல் ஆணையம் ஒப்புக்கொண்டுள்ளது. இந்த மின்வெட்டு சமயத்தில் மின்னனு வாக்குப்பதிவு எந்திரத்தில் ஏதேனும் முறைகேடுகள் நடந்திருக்கலாம் என எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகிறது.

230 தொகுதிகளை கொண்ட மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் கடந்த 28ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. வருகிற 11-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற இருப்பதால், வாக்குப்பதிவு எந்திரங்கள் ஓட்டு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், சாகர் எனும் பகுதியில் 28 ஆம் தேதியே தேர்தல் முடிந்த நிலையில் வாக்குப்பதிவு எந்திரங்களை ஒப்படைப்பதற்கு இரண்டு நாட்கள் தாமதமானது. இதைத்தொடர்ந்து சமந்தப்பட்ட அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் உறுதி அளித்துள்ளது.

Advertisement

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்.பி விவேக் தன்கா, சாகர் என்ற இடத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையத்துக்கு சில பெட்டிகளை 2 பேர் கொண்டு வந்து வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்றியுள்ளனர் என்று குற்றம்சாட்டினார். மேலும், வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராக்கள் தடைபட்டுள்ளது. இதன் மூலம் மின்னனு வாக்குப்பதிவு எந்திரங்கள் மாற்றப்பட்டிருக்கலாம் என்றும் புகார் தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து தேர்தல் ஆணைய அதிகாரிகள், மின்னணு எந்திரங்கள் எதுவும் மாற்றப்படவில்லை என்றும், வாக்குப்பதிவுக்கு பின் உபரியாக இருந்த எந்திரங்கள் அங்கு கொண்டு வரப்பட்டதாகவும் விளக்கம் அளித்தனர்.

Advertisement
Advertisement