This Article is From May 17, 2019

மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! நாளை மறுதினம் கடைசிகட்ட வாக்குப்பதிவு!!

2019 மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. மொத்தம் 543 மக்களவை தொகுதிகளுக்கும் பல்வேறு மாநிலங்களில் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டிய தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவுகள் நடைபெறுகின்றன.

மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! நாளை மறுதினம் கடைசிகட்ட வாக்குப்பதிவு!!

இன்று மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் நிறைவுபெற்றது.

2019 மக்களவை தேர்தலுக்கான அனைத்து தேர்தல் பிரசாரமும் முடிவடைந்துள்ளது. நாளை மறுதினம் கடைசிகட்ட வாக்குப்பதிவு 59 தொகுதிகளுக்கு நடக்கிறது.

ஞாயிறன்று நடைபெறும் தேர்தலில் உத்தரபிரதேசத்தில் 13, பஞ்சாபில் 13, மேற்கு வங்கத்தில் 9, பீகார் 8, ஜார்க்கண்ட் 3, மத்திய பிரதேசம் 8, இமாச்சல் 4 உள்பட மொத்தம் 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

முன்னதாக கொல்கத்தாவில் ஏற்பட்ட வன்முறை காரணமாக நேற்றிரவு 10 மணியுடன் தேர்தல் பிரசாரம் அங்கு முடித்துக் கொள்ளப்பட்டது. இதேபோன்று தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் முடிவடைந்துள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 22 தொகுதிகள் காலியாக உள்ளன. இதில் 18 தொகுதிகளுக்கு ஏற்கனவே கடந்த மாதம் 18-ம்தேதி தேர்தல் நடைபெற்றது. மீதம் உள்ள ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 4 தொகுதிகளில் நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

மே 23-ல் அனைத்து தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

.