வழக்கமாக அமைச்சர் நாகராஜ் பேண்டு வாத்தியங்களுடன்தான் பிரசாரத்திற்கு செல்வாராம்.
Hoskote: கர்நாடகாவில் வீட்டு வசதி அமைச்சர் எம்.டி.பி. நாகராஜ் பாம்பாட்டம் ஆடி காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தார். அவர் டான்ஸ் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது.
1954-ல் மெகா ஹிட் ஆன 'நாகின்' படத்தில் உள்ள பாடல் ஒன்று அதிரடி ஆட்டத்தை நாகராஜ் ஆடினார். பெங்களூருவில் இருந்து 27 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஹோஸ்கோடே என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
வழக்கமாக வாக்கு சேகரிக்க செல்லும்போது நாகராஜ் பேண்டு வாத்தியங்களுடன்தான் செல்வாராம். 67 வயதான அவர் பாம்பாட்டம் ஆடி வாக்கு சேகரித்த வீடியோ கர்நாடகாவில் பிரபலம் அடைந்திருக்கிறது.
வீடியோவை பார்க்க....
காங்கிரஸ் வேட்பாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான வீரப்ப மொய்லிக்கு ஆதரவாக நாகராஜ் வாக்கு சேகரித்தார். சிக்கபல்லபுரா மக்களவை தொகுதியில் வீரப்ப மொய்லி போட்டியிடுகிறார்.
நாகராஜின் பாம்பாட்டம் 10 நிமிடங்களுக்கு நீடித்தது. பின்னர் வயதாகி விட்டது, ஆட்டத்தை குறையுங்கள் என்று கூறி அவரது ஆதரவாளர்களை நாகராஜை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அவரை எம்.டி.பி. என்று பரவலாக அழைக்கின்றனர். அரசு சாரா நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி அவர்தான் நாட்டிலேயே பணக்கார எம்எல்ஏவாக கருதப்படுகிறார். அவருக்கு ரூ. 1,000 கோடிக்கு சொத்து உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் 2 கட்டங்களாக ஏப்ரல் 18 மற்றும் 23 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.