This Article is From May 31, 2018

"தேர்தல் ஆணையம் அரசுக்கு அடிமை ஆகிவிட்டது" - சிவ சேனா

மின்னணு வாக்குப்பதிவு இயந்திர முறைகேடை கண்டித்து தேர்தல் ஆணையத்திற்கு எதிராக ஷிவ் சேனா குரல் எழுப்பியுள்ளது. தற்போது அதிகாரத்தில் இருப்பவர்கள் தான் தேர்தல் ஆணையத்தின் "எஜமானிகள்" என குறிப்பிட்டுள்ளது.

ஹைலைட்ஸ்

  • பி.ஜே.பிக்கு "சர்வாதிகார மனநிலையை" - சிவ சேனா
  • பா.ஜ.க. தனது சொந்த நோக்கத்திற்காக தேர்தல் இயந்திரத்தை பய்னபடுத்துகின்றனர்
  • தேர்தல் இயந்திரம் ஜனநாயகத்தை கெடுத்துவிட்டது
Mumbai: மின்னணு வாக்குப்பதிவு இயந்திர முறைகேடை கண்டித்து தேர்தல் ஆணையத்திற்கு எதிராக ஷிவ் சேனா குரல் எழுப்பியுள்ளது. தற்போது அதிகாரத்தில் இருப்பவர்கள் தான் தேர்தல் ஆணையத்தின் "எஜமானிகள்" என குறிப்பிட்டுள்ளது.

பிஜேபி தந்து சொந்த நோக்கங்களை நிறைவேற்றுக்கொள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன் படுத்திக்கின்றனர். "நம் நாடு ஜனநாயக நாடாக இருக்காது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஜனநாயகத்தை அழித்துவிட்டது" என சேனா தெரிவித்தது.

"தேர்தல் ஆணையமும் அரசுக்கு அடிமையாக இருக்கிறது. எனவே, மது மற்றும் பண விநியோகம், அரசாங்கத்தின் சர்வாதிகாரம் மற்றும் அச்சுறுத்தும் அறிக்கைகளை தேர்தல் ஆணையம் கண்டுகொள்வதில்லை"  எனவும் தெரிவித்தது. 

"மக்கள் பிஜேபி அரசுக்கு எதிராக இருந்தபோதிலும் பிஜேபி தேர்தலில் வெற்றிபெற்றால் வாக்குப்பதிவு இயந்திரத்தில் இருக்கும் முறைகேடு தான் காரணம்" என குற்றம்சாட்டுகிறது. 

"ஓர் காலத்தில் பிஜேபி வாக்குப்பதிவு இயந்திரத்தை எதிர்த்து, இப்பொழுது மக்கள் அதை எதிர்க்க பிஜேபி ஆதரவு அளிக்கிறது - இதை தேர்தல் ஆணையம் கவனிக்க வேண்டும்" என வலிவுறுத்துகின்றனர் 
 
.