விமர்சனத்தின் அடிப்படையில் சரிபார்க்கப்படாத குற்றசாட்டுகளை தெரிவிக்கக் கூடாது என்று தகவல் தெரிவித்தது.
Chennai: அதிமுகவின் பிரசார வீடியோவை தேர்தல் ஆணையம் நிறுத்தி வைத்துள்ளது. சரிபார்க்கப்படாத குற்றச்சாட்டான “குடும்ப அரசியல்” என்பதை வெளிப்படுத்தும் அதிமுகவின் பிரசார வீடியோவை ஒளிபரப்புவதை நிறுத்தி வைத்துள்ளது.
மாநில அளவிலான ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்புக் குழு முன் ஒப்புதல் இல்லாமல் அரசியல் கட்சிகள் மின்னணு மற்றும் சமூக ஊடகங்களில் தங்கள் விளம்பரங்களை ஒளிபரப்பிக் கொண்டிருப்பதாக தேர்தல் ஆணையத்தின் தலைமை அதிகாரி சத்ய பிரதா சாகூ அலுவலகத்திலிருந்து ஒரு தகவல் வந்தது.
இந்த தகவல் “எல்லா ஊடங்களும் சேனகள்/ அச்சு ஊடகங்களுக்கு” தெரிவிக்கப்பட்டது
ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்புக் குழுவிடம் சான்றிதழ் பெற்றிருந்தாலும் சான்றிதழ் எண் விளபரத்துடன் சேர்த்து ஒளிபரப்பப் படவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த விஷயத்தில் அஇஅதிமுகவின் தேர்தல் பிரசார பரப்புரை வீடியோ மின்னணு மற்றும் சமூக வலைதளங்களில் ‘குடும்ப அரசியல்' என்ற குற்றச்சாட்டை வலியுறுத்தும் வகையில் இருந்த வீடியோ ஒளிபரப்பை நிறுத்தியுள்ளது. குடும்ப அரசியல் என்பது சரிபார்க்கப்படாத குற்றச்சாட்டு என்று தெரிவித்துள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறைப்படி மற்ற கட்சிகள் அல்லது பிற பணியாளர்கள் விமர்சனத்தின் அடிப்படையில் சரிபார்க்கப்படாத குற்றசாட்டுகளை தெரிவிக்கக் கூடாது என்று தகவல் தெரிவித்தது.
கேபிள் டிவி நெட்வொர்க் விதிகள் 1994இன் படி, இந்த விஷயத்தை வீடியோவாக ஒளிபரப்பப்படுவது உடனடியாக நிறுத்தபட வேண்டும், இல்லையெனில் கேபிள் டிவி சட்டத்தின் விதிமுறை மற்றும் சட்டத்தின் இது கடுமையான தண்டனைக்கு உரியது என்றும் தெரிவித்தது.