This Article is From Aug 21, 2020

கொரோனா காலத்தில் தேர்தல் நடத்துவதற்கான வழிமுறைகள் வெளியீடு

வேட்பாளர்கள் டெபாசிட் செய்யும் பணம் இணைய வழி பரிவர்த்தனையாக இருக்க வேண்டும் என்றும் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

கொரோனா காலத்தில் தேர்தல் நடத்துவதற்கான வழிமுறைகள் வெளியீடு

கொரோனா வைரஸ்: COVID-19 இன் போது தேர்தல் ஆணையம் தேர்தல் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது

ஹைலைட்ஸ்

  • கொரோனா காலத்தில் தேர்தல் நடத்துவதற்கான வழிமுறைகள் வெளியிடு
  • பொதுக் கூட்டங்களில் COVID-19 கட்டுப்பாட்டு நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும்
  • வீடு வீடாக பிரச்சாரத்திற்கு 5 நபர்கள் மட்டுமே இடம் பெற்றிருக்க வேண்டும்
New Delhi:

நாடு முழுவதும் கொரோளா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வந்துக் கொண்டிருக்கக்கூடிய நிலையில் தற்போது “கொரோனா காலத்தில் தேர்தல் நடத்துவதற்கான வழிமுறைகளை” தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

இதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பொத்தானை அழுத்துவதற்கு முன்பு வாக்காளர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறை, மற்றும் வீடு வீடாக பிரச்சாரத்திற்கு செல்லும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

ஆணையத்தின் வழிகாட்டுதல்களில் பொதுக் கூட்டங்கள் மற்றும் சாலை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யலாம், ஆனால் உள்துறை அமைச்சகத்தால் நிர்ணயிக்கப்பட்ட COVID-19 கட்டுப்பாட்டு நிபந்தனைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும், வீடு வீடாக பிரச்சாரத்திற்கு செல்லும்போது முககவசம் மற்றும் கையுறை அணிந்து ஒரு குழுவில் ஐந்து நபர்கள் மட்டுமே இடம் பெற்றிருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வேட்பாளர்கள் டெபாசிட் செய்யும் பணம் இணைய வழி பரிவர்த்தனையாக இருக்க வேண்டும் என்றும் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், முககவசம் அணிவது, சானிடைசர்களை பயன்படுத்துவது, வெப்ப ஸ்கேனர்களை நிறுவுதல் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ) உடைகளை அணிவது போன்ற பிற நிலையான பாதுகாப்பு நடவடிக்கைகள் தேர்தல் பணியின் போது தொடரும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.

COVID-19 தொடர்பான ஏற்பாடுகளை மேற்பார்வையிட மாநில, மாவட்டம் மற்றும் சட்டமன்றத் தொகுதிக்கு நோடல் சுகாதார அதிகாரி நியமிக்கப்படுவார் என்றும், மேலும் முழு தேர்தல் நடவடிக்கைகளின் போதும் தடுப்பு நடவடிக்கைகளை நோடல் அதிகாரிகள் பார்வையிடுவார்கள் என்றும் தேர்தல் அதிகாரிகளுக்கான பயிற்சி ஆன்லைன் முறை மூலம் ஏற்பாடு செய்யப்படலாம் என்றும் ஆணையம் தெளிவுப்படுத்தியுள்ளது.

.