இன்று மாலைதான் அனைத்துத் தேர்தல்களுக்குமான இறுதி முடிவுகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்.
New Delhi: தெலங்கானாவிர், கே.சந்திரசேகர் ராவ் தலைமையிலான டிஆர்எஸ் கட்சி, சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து, 'மாநில மக்களுக்காகவும், விவசாயிகளின் நலனுக்காவும் உழைப்போம்' என்று கூறியுள்ளார். சத்தீஸ்கர் முதல்வர் ரமண் சிங், சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தோல்வியடைந்ததற்கு, 'நான் வீழ்ச்சிக்கு முழு பொறுப்பு ஏற்றுக் கொள்கிறேன்' என்று தெரிவித்துள்ளார். மிசோரமில், மிசோ தேசிய முன்னணிக்கு ஆட்சியமைக்க பெரும்பான்மை கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. காங்கிரஸ், வடகிழக்கில் ஆட்சி புரிந்த வந்த ஒரே மாநிலம் மிசோரம் என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ், ராஜஸ்தானில் அரசு அமைப்பது குறித்து பேசி வருகிறது. அம்மாநிலத்தில் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட், ‘ஓர் எண்ணம் கொண்டவர்களுடன் நான் தொடர்பில் இருக்கிறேன்' என்று சூசகமாக தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மட்டுமின்றி, சத்தீஸ்கரிலும் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. மத்திய பிரதேசத்தில் பாஜக-வுடன் காங்கிரஸ் போட்டாப் போட்டி போட்டு வருகிறது. தெலங்கானாவைப் பொறுத்தவரை, கேசிஆரின், டிஆர்எஸ் அதிக பெரும்பான்மையுடன் தேர்தலில் வெற்றி பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
‘ராஜஸ்தான், பாஜக-வை நிராகரித்துள்ளது. பாஜக-வின் பல அமைச்சர்களே இந்த தேர்தலில் தோல்வியுற்றுள்ளனர்' என்று சச்சின் பைலட் கருத்து தெரிவித்துள்ளார்.
அக்கட்சியின் இன்னொரு தலைவரான அஷோக் கெலோட், ‘குஜராத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் போது, மோடியை ராகுல் எதிர்த்து நின்றது பல விஷயங்களில் அவரின் ஆளுமையைக் காட்டியது. அப்போதிலிருந்து இப்போது வரை, காங்கிரஸ் ஆற்றிய பணிதான் வெற்றியைத் தேடித் தந்துள்ளது' என்றுள்ளார்.
இன்று மாலைதான் அனைத்துத் தேர்தல்களுக்குமான இறுதி முடிவுகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்.
லைவ் அப்டேட்ஸ்:
மாலை 6:30 மணிக்கு: மிசோரம் மாநில முதல்வராக இருந்த லால் தன்னாவ்லா, தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் சமர்பித்தார். அவர், ‘தேர்தல் முடிவு மிகவும் வருத்தமளிக்கிறது. நான் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை' என்று கூறியுள்ளார். தன்னாவ்லா, தான் போட்டியிட்ட இரு தொகுதியிலும் தோல்வியடைந்தார்.
மாலை 6:08 மணிக்கு - 'நாங்கள் நரேந்திர மோடி மற்றும் அமித்ஷாவை அவர்களின் மாநிலத்திலேயே கிட்டத்தட்ட தோற்கடித்துவிட்டோம். தற்போதைய தேர்தல் முடிவுகள் அதற்கு அடுத்தக்கட்டமாகும்'- அஷோக் கெலோட்
மாலை 5:41 மணிக்கு- சத்தீஸ்கரில் செய்தியாளர்களை சந்தித்தார் ரமண் சிங்:
-சத்தீஸ்கர் பாஜக தோல்விக்கு நானே முழு பொறுப்பு ஏற்றுக் கொள்கிறேன்.
-ஒரு முறையான எதிர்கட்சியாக நாங்கள் செயல்படுவோம்.
-தோல்வி குறித்து கட்சிக்குள் நாங்கள் கலந்துரையாடுவோம்.
-என் வாழ்நாள் முழுவதும் நான் உழைத்தாலும், சத்தீஸ்கர் மக்கள் என் மீது காட்டிய பாசத்துக்கும் அன்புக்கும் அது ஈடாகாது.
மாலை 5:26 மணிக்கு
மாலை 4:56 மணிக்கு- கேசிஆர் பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசியுள்ளார்:
-விவசாயிகளுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதுதான் எனது எண்ணம். எனது தலைமையிலான அரசு விவசாயிகளின் நலனை பாதுகாக்கும்
-எனது கொள்கையும், வாக்குறுதிகளையும் தெலங்கானா மக்கள் ஏற்றுக் கொண்டனர் என்பதில் மகிழ்ச்சி
-தெலங்கானா இளைஞர்கள் தங்களுகுக வேலை கிடைப்பதில்லை என்ற சோகத்தில் இருக்கின்றனர்.
-ஆட்சி அமைத்ததும், அனைத்துத் தரப்பினருக்காகவும் பணி செய்து, வளர்ச்சிப் பாதையில் மாநிலத்தை அழைத்துச் செல்வோம்
மாலை 4:53 மணிக்கு- மிசோரமில் காங்கிரஸ் சார்பில் 5 முறை ஆட்சி புரிந்த லால் தன்னாவ்லா, போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் தோல்வியடைந்துள்ளார். மிசோரம் மாநிலத்தில் போட்டியிட்ட முக்கிய வேட்பாளர்களின் விபரம்
மாலை 4:40- மம்தா பானர்ஜி, ஊடகங்களை சந்தித்துப் பேசினார்:
-பாஜக தோல்விக்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அவர்கள் சாமானிய மனிதனை கஷ்டப்படுத்தினர். பணமதிப்பிழப்பு, ஜனநாயக அமைப்புகள் மீது அவர்கள் தொடுத்த தாக்குதலும் தோல்விக்கு வழி வகுத்துள்ளது.
-அனைத்துப் பிராந்திய கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். மாநிலங்கள்தான் இந்தியாவில் தூண்.
-நாட்டின் அனைத்து இடங்களிலும் பாஜக-வின் பிடி தளர்ந்துள்ளது. அவர்கள் மிக மோசமான நிலையில் உள்ளனர்.
-மக்கள், லோக்சபா தேர்தலுக்காகத்தான் காத்திருக்கின்றனர். தேர்தல் வரும்போது, பாஜக-வை பதவியிலிருந்து மக்கள் தூக்கி எறிவார்கள். இதுதான் அவர்களின் முடிவின் தொடக்கம்
மாலை 4:38 மணிக்கு- மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் 117 இடங்களில் முன்னணி. பாஜக, 103 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
மாலை 4:30 மணிக்கு- 'வாக்காளர்கள் தங்களுக்கு எது தேவையில்லை என்று நினைத்தார்களோ அதை நிராகரித்துள்ளனர்!'- சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே
மாலை 4:27 மணிக்கு- ராஜஸ்தான் சட்டப்பேரவை சபாநாயகர், கைலாஷ் மேகாவால், 74, 542 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்
மாலை 4:13 மணிக்கு-
மாலை 4:09 மணிக்கு- காங்கிரஸின் சச்சின் பைலட், டாங்க் தொகுதியில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக-வின் யூனஸ் கானை, 54,179 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து, வெற்றி வாகை சூடியுள்ளார்.
மாலை 4:02 மணிக்கு- காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நாளை நடைபெறும்: சச்சின் பைலட் தெரிவித்துள்ளதாக தகவல்
மாலை 4:01 மணிக்கு-
மதியம் 3:53 மணிக்கு - மிசோ தேசிய முன்னணிக்கு, ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைத்துள்ளது: தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளதாக பிடிஐ நிறுவனம் கூறியுள்ளது.
மதியம் 3:50 மணிக்கு- தெலங்கானாவில் அனைத்து கருத்துக் கணிப்புகளையும் பொய்யாக்கி, கேசிஆரின் டிஆர்எஸ் கட்சி மிகப் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. டிஆர்எஸ் மொத்தம் இருக்கும் 119 இடங்களில், 86-ல் வெற்றி பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மதியம் 3:46 மணிக்கு - சத்தீஸ்கர் காங்கிரஸ் தலைவர் பூபேஷ் பாகல் NDTV-யிடம் கூறுகையில்,
'இது மக்களுக்குக் கிடைத்த வெற்றி. பாஜக-வின் தவறான ஆட்சி இந்த நிலைக்கு அவர்களைத் தள்ளியுள்ளது. கட்சித் தலைமை என்ன சொன்னாலும் அதன்படி நடக்க நான் தயாராக இருக்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.
மதியம் 3:28 மணிக்கு- 'யோகி ஆதித்யநாதின் பிரித்தாளும் உத்தி எடுபடாது என்று மக்கள் நிரூபித்துள்ளனர்': காங்கிரஸ் நிர்வாகி ஷாமா முகமது
மதியம் 2:58 மணிக்கு- ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
முதல்வர் வசுந்தரா ராஜே, 45,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியடைந்துள்ளார்.
மூத்த காங்கிரஸ் நிர்வாகி அஷோக் கெலோட், 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி கண்டுள்ளார்.
மதியம் 2:58 மணிக்கு - பாஜகவின் மூத்த தலைவர் அனில் ஜா, ''தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் வாழ்த்துக்களை கூறிக் கொள்கிறேன். இந்த தேர்தலில் வாக்கு மெஷின்களில் முறைகேடு செய்ய முடியாது'' என்பது நிரூபணம் ஆகியுள்ளது என்று கூறியுள்ளார்.
மதியம் 2:42 மணிக்கு - மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். இதனை விமர்சித்துள்ள நெட்டிசன்கள், இன்னும் வெற்றி பெறாத தேர்தலுக்காக சுற்றுப்புறத்தை ஏன் மாசுபடுத்துகிறீர்கள் என்று கூறியுள்ளனர்.
மதியம் 2:39 மணிக்கு -
மதியம் 2:33 மணிக்கு - காங்கிரஸ் மூத்த தலைவர் ரேணுகா சவுத்ரி என்.டி.டீ.வி.-க்கு பேட்டி அளித்துள்ளார். வெற்றிக்காக உழைத்த காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாராட்டுக்கள். அரசியல் என்பது முடியாததையும் முடித்துக் காட்டுவதுதான் என்று ரேணுகா சவுத்ரி கூறியுள்ளார்.
மதியம் 2:25 மணிக்கு - 'ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் நாங்கள் தோல்வியடைவோம் என்று எதிர்பார்த்தோம். ஆனால், மத்திய பிரதேச நிலை எங்களுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்துள்ளது. 2014 ஆம் ஆண்டு, பிரதமர் மோடி முன்னெடுத்த வளர்ச்சி என்ற கோஷம் பின்னுக்குத் தள்ளப்பட்டு, கோயில் கட்டுவது, சிலை வைப்பது, பெயர் மாற்றுவது போன்ற காரணிகள் முன்னிலைப் பெற்றன' என்று பாஜக எம்.எல்.ஏ சஞ்சய் ககாடே கருத்து தெரிவித்துள்ளார்.
மதியம் 2:23 மணிக்கு
மதியம் 2:21 மணிக்கு
மதியம் 2:15 மணிக்கு -
மதியம் 2:15 மணிக்கு - அடல் பிகாரி வாஜ்பாய் மறுமகன் அணூப் மிஷ்ரா, மிதார்வார் மாவட்டத்தின் குவாலியர் தொகுதியிலிருந்து போட்டியிட்டுள்ளார்.
மதியம் 2:13 மணிக்கு- பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, நாளை ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில் தேர்தலில் வெற்றி பெற்ற கட்சி வேட்பாளர்களை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மதியம் 2:09 மணிக்கு -
மதியம் 1:58 மணிக்கு -
மதியம் 1:49 மணிக்கு - சத்தீஸ்கரில் காங்கிரஸ் 64 இடங்களிலும், பாஜக 19 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.
மதியம் 1:44 மணிக்கு -
மதியம் 1:36 மணிக்கு - காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, டெல்லி, 10 ஜன்பத்தில் உள்ள சோனியா காந்தியின் வீட்டுக்கு வந்துள்ளார்.
மதியம் 1:32 மணிக்கு -
மதியம் 1:26 மணிக்கு -
மதியம் 1: 24 மணிக்கு - மேற்கு வங்கத்தில், காங்கிரஸ் தொண்டர்கள் இரு மாநிலத்தில் பெற்ற வெற்றியைக் கொண்டாடுகின்றனர்.
மதியம் 1: 06 மணிக்கு
மதியம் 1: 04 மணிக்கு
மதியம் 1:02 மணிக்கு - செய்தியாளர்களை அஷோக் பைலட் சந்தித்துப் பேசும்போது, 'பாஜக, தங்களால் ஆன அனைத்தையும் செய்து பார்த்தது. ஆனால், ராஜஸ்தான் மக்கள் தெளிவான முடிவைத் தந்துள்ளனர். நாங்கள் அரசு அமைக்கப் போகிறோம். ராஜஸ்தான், பாஜக-வை நிராகரித்துள்ளது. பாஜக-வின் பல அமைச்சர்களே இந்த தேர்தலில் தோல்வியுற்றுள்ளனர்' என்று கூறினார்.
மதியம் 12:55 மணிக்கு
மதியம் 12:47 மணிக்கு
மதியம் 12:34 மணிக்கு
மதியம் 12:30 மணிக்கு
மதியம் 12:20 மணிக்கு
மதியம் 12:17 மணிக்கு - அஷோக் கெலோட், காங்கிரஸின் வெற்றி முகத்தை அடுத்து செய்தியாளர்களை சந்தித்தார்:
‘குஜராத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் போது, மோடியை ராகுல் எதிர்த்து நின்றது பல விஷயங்களில் அவரின் ஆளுமையைக் காட்டியது. அப்போதிலிருந்து இப்போது வரை, காங்கிரஸ் ஆற்றிய பணிதான் வெற்றியைத் தேடித் தந்துள்ளது'
மதியம் 12:15 மணிக்கு - 5 முறை மிசோரம் முதல்வராக பதவி வகித்த லால் தன்னாவ்லா, போட்டியிட்ட 2 இடங்களிலும் தோல்வியடைந்துள்ளார்.
மதியம் 12:12 மணிக்கு - ஐதராபாத்தில் டிஆர்எஸ் தலைமையகத்தில், ‘பிங்க் கடல்'
மதியம் 12:06 மணிக்கு
மதியம் 12:05 மணிக்கு- ஜல்ரபதன் தொகுதியில் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே முன்னிலை. இந்தத் தொகுதியிலிருந்து அவர் 3 முறை எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மதியம் 12:01 மணிக்கு - மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக, சமமான இடத்தில் முன்னிலை. இரு கட்சிகளும் 110 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.
காலை 11:59 மணிக்கு - மக்கள் பாஜக-வுக்கு எதிராக வாக்களித்துள்ளனர். இது ஜனநாகயத்தைக் காப்பாற்ற மக்கள் எடுத்த முடிவு: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.
காலை 11:55 மணிக்கு - டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்திற்கு வெளியே, அக்கட்சித் தொண்டர்கள் பட்டாசு வெடித்து மேள தாளத்துடன் கொண்டாட்டம்.
காலை 11:48 மணிக்கு - தெற்கு சம்பாய் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரும் மிசோரம் மாநில முதல்வருமான லால் தன்னாவ்லா தோல்வியடைந்துள்ளார். அவர் இரு தொகுதியில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
காலை 11:45 மணிக்கு
காலை 11:37 மணிக்கு - மத்திய பிரதேசத்தில் பாஜக தற்போது முன்னிலை பெற்றுள்ளது.
காலை 11:32 மணிக்கு
காலை 11:30 மணிக்கு
காலை 11:24 மணிக்கு - ராஜஸ்தானில் காங்கிரஸ் முன்னிலை பெற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் சச்சின் பைலட்:
-ராஜஸ்தானில் காங்கிரஸ்தான் ஆட்சி அமைக்கப் போகிறது என்பது உறுதியாகிவிட்டது. ஆனால், எனக்கு வரும் செய்திகளை வைத்துப் பார்த்தால் 3 மாநிலங்களில் நாங்கள் தான் முன்னிலையில் இருக்கிறோம் என்று தெரிகிறது.
-இன்று எங்களுக்கு மிக முக்கியமான நாள். சரியாக ஓராண்டுக்கு முன்னர் தான், ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் தலைவரானார்.
-கடந்த சில காலமாக பாஜக தொடர்ந்து தோல்வி கண்டு வருகிறது. இன்றைய முடிவும், அதையே வெளிக்காட்டியுள்ளது. பாஜக மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
-மேலும் முடிவுகள் அறிவிக்கப்படும்போது, எங்களுக்குப் பெரும்பான்மை கிடைக்கும்.
-3 மாநிலங்களில் காங்கிரஸ் பெரும்பான்மை பெற்றிருக்கிறது.
காலை 11:22 மணிக்கு - ஐதராபாத்தில் இருக்கும் டிஆர்எஸ் கட்சி அலுவலகத்திற்கு வெளியே தொண்டர்கள் கொண்டாட்டம்.
காலை 11:16 மணிக்கு - சத்தீஸ்கரில் காங்கிரஸ் மொத்தம் இருக்கும் 90 இடங்களில் 55 இடங்களில் முன்னிலை.
காலை 11:13 மணிக்கு - 'காங்கிரஸ் கண்டிப்பாக ராஜஸ்தானில் ஆட்சி அமைக்கும்' - அஷோக் கெலோட்
காலை 11:04 மணிக்கு - 5 மாநில முதல்வர்களின் தற்போதைய நிலை.
காலை 11:03 மணிக்கு - சில ஏற்றத் தாழ்வுகள் தற்போது முடிவுகளின் வழியே தெரிந்தாலும், இறுதியில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்பதில் எங்களுக்கு நம்பிக்கையுள்ளது - கமல்நாத், காங்கிரஸ்
காலை 10:57 மணிக்கு - மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் 114 இடங்களில் முன்னிலை. பாஜக 100 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
காலை 10:55 மணிக்கு -
காலை 10:54 மணிக்கு -
காலை 10:50 மணிக்கு - ஏஐஎம்ஐஎம் வேட்பாளர் அக்பருதீன் ஒவைசி, சந்திரயான்குட்டாவில் வெற்றி பெற்றார்
காலை 10:42 மணிக்கு -
காலை 10:42 மணிக்கு -
காலை 10:41 மணிக்கு - ராஜ்நந்த்கோனில் சத்தீஸ்கர் முதல்வர் ரமண் சிங் முன்னிலை. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸின் கருணா சுக்லா பின்னடைவு
காலை 10:39 மணிக்கு -
காலை 10:30 மணிக்கு -
காலை 10:29 மணிக்கு -
காலை 10:26 மணிக்கு - மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ், பாஜக பலப்பரீட்சை. பாஜக 102 இடங்களிலும், காங்கிரஸ் 103 இடங்களிலும் முன்னிலை
காலை 10:17 மணிக்கு -
காலை 10:12 மணிக்கு - மத்திய பிரதேசத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பாஜக வேட்பாளர்களின் நிலை
காலை 10:10 மணிக்கு - மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தானில் காங்கிரஸ் முன்னிலை. ம.பி-யில் 102 இடங்களிலும், சத்தீஸ்கரில் 55 இடங்களிலும், ராஜஸ்தானில் 101 இடங்களிலும் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது.
காலை 10:04 மணிக்கு -
காலை 9:55 மணிக்கு -
காலை 9:54 மணிக்கு - மத்திய பிரதேச தேர்தலில் முதன் முறையாக ஆம் ஆத்மி கட்சி போட்டியிடுகிறது. போபாலின் தென்மேற்குப் பகுதியிலிருந்து அக்கட்சியின் அலோக் அகர்வால் போட்டியிட்டார். அத்தொகுதியில் அவர் பின் தங்கியுள்ளார்.
காலை 9:41 மணிக்கு -
காலை 9:41 மணிக்கு - மிசோரமில் காங்கிரஸ் கட்சியின் லால் தன்னாவ்லா, செர்ச்சிப் தொகுதியில் முன்னிலை வகிப்பது தெரிகிறது.
காலை 9:38 மணிக்கு - மிசோரமில், மிசோ தேசிய முன்னணி 18 இடங்களில் முன்னிலை. காங்கிரஸ் 5 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
காலை 9:38 மணிக்கு -
காலை 9:37 மணிக்கு -
காலை 9:31 மணிக்கு - ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் முன்னணி
காலை 9:31 மணிக்கு -
காலை 9:25 மணிக்கு - காங்கிரஸின் முக்கிய வேட்பாளர்கள் மத்திய பிரதேசத்தில் முன்னிலை
காலை 9:24 மணிக்கு -
காலை 9:23 மணிக்கு -
காலை 9:20 மணிக்கு - டிஆர்எஸ், தெலங்கானாவில் 72 இடங்களில் முன்னிலை. மிசோரமில், மிசோ தேசிய முன்னணி, 8 இடங்களில் லீடிங்
காலை 9:17 மணிக்கு - அரசியல்வாதிகளுக்கு வேண்டுமானால், பதற்றம் இருக்கலாம். ஆனால், நிருபர்களுக்கு இந்நேரத்தில் முக்கியம் பசியாறுவது. ராய்பூர் காங்கிரஸ் அலுவலகத்துக்கு வெளியே எடுத்த படம் - அலோக் பாண்டே, பத்திரிகையாளர்
காலை 9:16 மணிக்கு - ம.பி முன்னணி நிலவரம்: பாஜக 46, காங்., 36
காலை 9:12 மணிக்கு - சச்சின் பைலட் வீட்டுக்கு வெளியே உள்ள சூழல்
காலை 9:06 மணிக்கு - மத்திய பிரதேசத்தில் வாக்கு எண்ணிக்கை நடக்கும் இடம். 2013 நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக 165 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 58 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. பிஎஸ்பி, 4 இடங்களைப் பிடித்தது.
காலை 8:59 மணிக்கு - காங்கிரஸின் சச்சின் பைலட், டாங்க் தொகுதியில் முன்னிலையில் இருக்கிறார்.
காலை 8:57 மணிக்கு - தெலங்கானாவில் டிஆர்எஸ் 40 தொகுதியில் லீடிங்
காலை 8:54 மணிக்கு - மிசோரமில், மிசோ தேசிய முன்னணி 1 இடத்தில் முன்னிலை
காலை 8:49 மணிக்கு - காங்கிரஸின் அஷோக் கெலோட், சர்தர்புரா தொகுதியில் முன்னிலை
காலை 8:48 மணிக்கு- மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ்- பஜக இடையில் கடும் போட்டி. ராஜஸ்தானில், பாஜக 20 இடங்களிலும், காங்கிரஸ் 30 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.
காலை 8:42 மணிக்கு -
காலை 8:38 மணிக்கு - ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, ஜல்ரபதான் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரான மன்வேந்திரா சிங்கை விட முன்னிலையில் உள்ளார்.
காலை 8:36 மணிக்கு - வாக்கு எண்ணிக்கையின் முதல் 30 நிமிடங்களில் டிஆர்எஸ் முன்னிலையில் இருக்கிறது. ஜோகு ரமண்ணா அடிலாபாத்தில் முன்னிலை.
காலை 8:35 மணிக்கு - மத்திய பிரதேசத்தில் உள்ள 230 தொகுதிகளில் 116 இடங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியும்.
காலை 8:27 மணிக்கு - சத்தீஸ்கர் மற்றும் மத்திய பரிதேசத்தில் காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. ராஜஸ்தானில் காங்கிரஸ் மற்றும் தெலுங்கானாவில் டி.ஆர்.எஸ். முன்னிலை வகிக்கிறது.
காலை 8:26 மணிக்கு -
காலை 8:24 மணிக்கு - காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் வீட்டின் முன்னர் 'யாகம்' நடத்தும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள்.
காலை 8:22 மணிக்கு -
காலை 8:20 மணிக்கு -
காலை 8:18 மணிக்கு -
காலை 8:17 மணிக்கு - ராஜஸ்தானில் 6 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை, 3 இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது.
காலை 8:15 மணிக்கு - முதல் கட்ட வாக்கு எண்ணிக்கை விபரங்கள் : மத்திய பிரதேசத்தில் பாஜக 2 தொகுதிகளிளும், காங்கிரஸ் 1 தொகுதியிலும் முன்னிலை வகிக்கின்றன.
காலை 8:01 மணிக்கு - எட்டு மணி கடந்துவிட்டதால், 5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஆரம்பமானது.