Lok Sabha Election Results 2019: ராகுல் காந்தியின் ‘காவலனே திருடன்’ (சவ்வுகிதார் சோர் ஹே) என்ற கோஷம் ரஃபேல் ஊழல் குறித்து சொல்லப்பட்டது. (File)
New Delhi: நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி கட்சி முன்னிலையில் உள்ளது. பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறும் எனத் தெரிகிறது. பாஜக 350 இடங்களிலும் காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள் 88 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.
காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
ராகுல் காந்தி உத்தரபிரதேசத்தில் அமேதி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற கடுமையாக போராடி வருகிறார். காங்கிரஸின் கோட்டையான அமேதி தொகுதியில் கூட வெற்றி பெறாத நிலை காங்கிரஸ்க்கு பெரும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது. கட்சியின் நட்சத்திர பிரசாரகர் பிரியங்கா காந்தி தொகுதியில் அதிகளவு பிரச்சாரம் செய்திருந்தார்.
ராகுல் காந்தியின் ‘காவலனே திருடன்' (சவுகிதார் சோர் ஹே) என்ற கோஷம் ரஃபேல் ஊழல் குறித்து சொல்லப்பட்டது. ஆனால் அந்த கோஷம் கை கொடுக்கவில்லை என்றே தெரிகிறது. மோடியை எதிர்த்து காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தலைவர் கூட இல்லை என்பது இந்த தேர்தலில் தெரிந்து விட்டது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
கடந்த தேர்தலில் காங்கிரஸ் 44 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. அப்போது காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தியும் ராகுல் காந்தி துணைத் தலைவராக இருந்து பிரசாரத்தை வழிநடத்தினர்.