This Article is From May 26, 2019

ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கோரி ஜெகன் மோகன் ரெட்டி பிரதமர் மோடியை சந்தித்தார்

Election Results 2019: இதில் சட்டபேரவையில் 151 இடங்களை ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது.மக்களவையில் 25 இடங்களையும் வென்றது.

India Election Results: . மத்திய அரசுடனும் மோடியிடனும் நல்லுறவை பேண விரும்புவதாக கூறப்படுகிறது.

Hyderabad:

ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அபார வெற்றி பெற்றது. 175 உறுப்பினர்கள் கொண்ட சட்டமன்றத்திற்கு 151 இடங்களை வென்றுள்ளது.

ஆளுங்கட்சியாக இருந்த சந்திரபாபு நாயுடு தெலுங்கு தேசம் கட்சி வெறும் 23 உறுப்பினர்களை மட்டுமே பெற்றது. மக்களவை தேர்தலிலும் 25 தொகுதிகளில் 22 இடங்களை ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கைப்பற்றியது. 

எஞ்சிய 3 தொகுதிகளை தெலுங்கு தேசம் வென்றது. வரும் 30 ஆம் தேதி ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திர முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில் டெல்லி சென்று தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் தலைவர் மோடியை ஜெகன் மோகன் ரெட்டி சந்தித்தார்.


அப்போது ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். இந்த சந்திப்பிற்கு பின் பேசியவர், எங்களது மாநில அந்தஸ்து கோரிக்கை தொடரும், நிதியளிப்பிலும் கூடுதல் முன்னுரிமை அளிக்க கோரியுள்ளோம். என்று கூறினார்.

பிரதமர் மோடியும் இது ஒரு சிறப்பான சந்திப்பு. ஆந்திர மாநில வளர்ச்சிக்கு மத்திய அரசு தேவையானதை செய்யும் என்று தன் ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
 

.