Election Results 2019 Live Updates: Maharashtra, Haryana தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்படவுள்ளது
மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களில் கடந்த 21 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலின் முடிவுகள் இன்று அறிவிக்கப்படவுள்ளது. மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் 21 ஆம் தேதி நடைபெற்றது. இதில் ஆளும் பாஜக - சிவசேனாவுடன் கூட்டணி அமைத்துள்ளது. எதிர்த்தரப்பில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைந்துள்ளது. இந்த தேர்தலில் உத்தவ் தாக்கரேவின் மூத்த மகன் ஆதித்யா தாக்கரே 'வொர்லி' தொகுதியில் முதல் முறையாக போட்டியிடுகிறார்.
சரத் பவார் தலைமையிலான என்சிபி 55 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சியானது 39 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
ஹரியானாவில் 90 இடங்களில் 40 இடங்களில் மட்டுமே முன்னிலையில் இருக்கிறது பாஜக. இதற்கு பொறுப்பேற்று பதவி விலக தயார் என மாநில தலைவர் சுபாஷ் பராலா தெரிவித்துள்ளார்.
வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு மும்பை பாஜக தலைமையிடத்தின் வெளியே பாஜக தலைவர்களின் கட்-அவுட் கள் வைக்கப்பட்டுள்ளன.
ஹரியானாவில் எந்த பாஜக தலைவரும் வெற்றி பெறுவது போல் இல்லை: துஷ்யந்த சவுதாலா
ஹரியானாவில் பாஜக 75 இடங்களுக்கு மேல் வெற்றி பெற வாய்ப்புள்ளது: யோகேந்திர யாதவ்
மகாராஷ்டிரா, ஹரியானாவில் வாக்கு எண்ணிக்கை துவங்கியது. மகாராஷ்டிராவில் பாஜக , சிவ்சேனா கூட்டணி 4 இடங்களிலும் ஹரியானாவில் பாஜக ஒரு இடத்திலும் முன்னணி
மகாராஷ்டிராவில் 60.05 சதவிகிதம் மக்களும் ஹரியானாவில் 63.08 சதவிகிதம் மக்களும் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.
மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளதை தொடர்ந்து பாஜகவினர் வெற்றி பெறும் நம்பிக்கையில் உள்ளனர்.