This Article is From May 23, 2019

Election Results 2019: நான்கு மாநில சட்டசபை தேர்தல் - Live Updates

2019 Election Results: ஆந்திரா, அருணாச்சல் பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் ஏப்ரல் 11 ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. ஒடிசாவில் நான்கு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற்றது.

Advertisement
இந்தியா Posted by

Elections 2019: நான்கு மாநிலங்களின் சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்படும்

இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது. அத்துடன் ஆந்திரா, அருணாச்சல், சிக்கிம், ஒடிசா ஆகிய மாநிலங்களிலும் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலின் முடிவுகள் இன்று அறிவிக்கப்படவுள்ளது.

ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் ஏப்ரல் 11 ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. ஒடிசாவில் நான்கு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற்றது.

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சிக்கும் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் கட்சிக்கும் இடையே பலத்த போட்டி இருக்கும் என கணிக்கப்படுகிறது.




Advertisement