Lok Sabha Election Results 2019: 542 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடக்கிறது
ஏப்ரல் 11 முதல் மே 19 வரை ஏழு கட்டங்களாக 17வது மக்களவை தேர்தல் நடைபெற்றது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்புகள் பாஜகவிற்கு ஆதரவாகவே உள்ளது. கருத்துகணிப்புகளை நம்ப வேண்டாம் என காங்கிரஸ் கட்சி கேட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் குறித்த லைவ் அப்டேட்ஸை இந்த தளத்தில் காணலாம்...
''நடுத்தர குடும்பத்தினர் திருப்தி அடைந்ததுதான் எங்களது தேர்தல் வெற்றியி பிரதிபலிக்கிறது. ஒருபோதும் நான் தளர்வடையவில்லை. பிரதமர் ஆனது முதல் நான் பல தடைகளை கடந்துள்ளேன்.'' - பிரதமர் மோடி
கர்நாடகாவில் முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதா தளத்தின் தலைவருமான தேவகவுடா தும்கூர் மக்களவை தொகுதியில் 13,339 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் பசவராஜிடம் தோல்வி அடைந்துள்ளார்.
39 ஆண்டுகளுக்கு பின்னர் சேலத்தில் வெற்றி பெற்ற திமுக!!
1980-ல் திமுக வெற்றி பெற்றது. இதன்பின்னர் காங்கிரஸ், அதிமுக கட்சிகள் மாறி மாறி வெற்றி பெற்றுவந்த நிலையில் தற்போது திமுக வேட்பாளர் எஸ்.ஆர். பார்த்திபன் வெற்றி பெற்றுள்ளார். இங்கு அவர் 4,84,658 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் சரவணன் 3,63,813 வாக்குகளும் பெற்றனர்.
மோடிக்கு ப.சிதம்பரம் வாழ்த்து!!
மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பதிவில், ''நாடாளுமன்றத் தேர்தலில் மிகச் சிறப்பான வெற்றியைப் பெற்ற திரு நரேந்திர மோடி மற்றும் பாஜக ஆகியவர்களுக்கு என்னுடைய மனம் நிறைந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். உயர்ந்த பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்கள் நல்வாழ்வு ஆகியவற்றுக்கு அவர்கள் பாடுபட என்னுடைய நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.
தேர்தல் வெற்றிக்கு பின்னர் சவுக்கிதார் அடைமொழியை பாஜக தலைவர்கள் சமூக வலைதள அக்கவுன்டுகளில் நீக்கி வருகின்றனர்.
முன்னணி நிலவரம் - பாஜக 345, காங்கிரஸ் 92, மற்றவை 105
தேர்தல் வெற்றிக்கு பின்னர் பாஜக தலைவர்கள் சமூக வலைதளங்களில் தங்களது பெயருக்கு முன்பிருந்த சவுக்கிதார் அடைமொழியை நீக்கி வருகின்றனர்.
மோடிக்கு பாக். பிரதமர் வாழ்த்து!!
பிரதமர் நரேந்திர மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், தெற்காசியாவில் வளமும், வளர்ச்சியையும் ஏற்படுத்துவதற்கு பிரதமர் மோடியுடன் இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்கி உள்ளதாக கூறியுள்ளார்.
4 மாநிலங்களில் பாஜக முழு வெற்றி!
மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் டெல்லியில் உள்ள அனைத்து நாடாளுமன்றத்தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
ராகுல் காந்தி வெற்றி!
கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதியில் ராகல் காந்தி வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 12,76, 945 வாக்குகளை பெற்ற ராகுல் காந்தி வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
8 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் முன்னிலை!!
கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதியில் போட்டியிட்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 8 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
மோடி வாழ்த்து!
ஆந்திர சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுக்கும், அதன் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டிக்கும் பிரதமர் மோடி வாழ்த்து கூறியுள்ளார்.
தேசிய அளிவில் பாஜக பெருவாரியான இடங்களில் முன்னிலை பெற்ற நிலையில் பாஜக அலுவலகத்திற்கு கட்சி தலைவர் அமித் ஷா வருகை தந்துள்ளார்.
7.90 லட்சம் வாக்குகள் பெற்ற ராகுல்!!
கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 7 லட்சத்து 90 ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ளார்.
வென்றார் மோடி!!
வாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 3.85 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மோடி வெற்றி பெற்றுள்ளார்.
மொத்தம் 344 தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலை வகிக்கிறது.
வரும் 26-ம்தேதி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்கிறார் பிரதமர் மோடி.
''இந்தியா மீண்டும் வெற்றி பெற்றது'' : மோடி
மக்களவை தேர்தலில் பாஜக 330-க்கும் அதிகமான இடங்களில் முன்
னிலை பெற்றுள்ள நிலையில் பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார். அவர் தனது ட்வீட் பதிவில், ''ஒன்றாக வளர்வோம், ஒன்றாக வளர்ச்சி பெறுவோம், ஒன்றிணைந்து வலிமை மிக்க இந்தியாவை உருவாக்குவோம். இந்தியா மீண்டும்வெற்றி பெற்றுள்ளது'' என்று கூறியுள்ளார்.
“வெல் டன் நண்பா”நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியை நோக்கி பாஜக பயணிக்கும் நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, பிரதமர் நரேந்திர மோடியை வாழ்த்தியுள்ளார்.
“இந்தியாவின் வெற்றி”
"இது இந்தியாவின் வெற்றி. இளைஞர்களின், ஏழைகளின், விவசாயிகளின் நம்பிக்கைக்குக் கிடைத்த வெற்றி. பிரதமர் மோடியின் மீது நாட்டு மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைத்தான் இந்த வெற்றி காண்பிக்கின்றது. கோடான கோடி பாஜக தொண்டர்கள் சார்பில் பிரதமர் நரேந்திர மோடியை நான் பாராட்டிக் கொள்கிறேன்" என்று பாஜக தலைவர் அமித்ஷா ட்வீட் பதிவிட்டுள்ளார்.
தேசிய அளவில் பாஜக 348 இடங்களிலும், காங்கிரஸ் 90, மற்ற கட்சிகள் 104 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.
கோவையில் பாஜக பின்னடைவு!!
கோவையில் பாஜக வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் 1,46,517 வாக்குகளையும், அவரை எதிர்த்து போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பி.ஆர். நடராஜன் 2,07,261 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
'சாதித்துவிட்டார் மோடி' : ரஜினிகாந்த்
மக்களவை தேர்தலில் பாஜக முன்னிலை பெற்று வரும் நிலையில் பிரதமர் மோடிக்கு ரஜினிகாந்த் வாழ்த்து கூறியுள்ளார். மோடிக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள் என்று கூறியுள்ள ரஜினிகாந்த் மக்களவை தேர்தலில் மோடி சாதித்து விட்டார் என்றும் கூறியுள்ளார்.
மோடிக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!
பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். மோடியின் தலைமையின் கீழ் நாடு சிறந்து விளங்க வாழ்த்துவதாக கூறியுள்ளார் தமிழக முதல்வர்.
ஆட்சியமைப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 5.30-க்கு முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.
தேசிய அளவில் பாஜக 338 தொகுதிகளிலும், காங்கிரஸ் 98 இடங்களிலும் முன்னிலை.
ஆந்திர சட்டசபை தேர்தல் வெற்றியை தொடர்ந்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி வரும் 30-ம்தேதி முதல்வராக பதவி ஏற்கிறார்.
தேசிய அளவில் பாஜக 339 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 90. மற்றவை 113
பிரதமர் மோடிக்கு இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே வாழ்த்து கூறியுள்ளார்.
மகாராஷ்ட்ரா முன்னிலை நிலவரம் பாஜக - 44 காங் - 03 மற்றவை - 01
உத்தரபிரதேசத்தின் அமேதி தொகுதியில் பாஜக சார்பாக ஸ்மிருதி இராணி போட்டியிடுகிறார். இங்கு போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அவர் கடும் போட்டி கொடுக்கிறார். 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுலை பின்னுக்கு தள்ளியுள்ளார் ஸ்மிருதி
கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு கைகொடுக்கும் தமிழகம்? - தேசிய அளவில் 5 இடங்களில் மட்டுமே கம்யூனிஸ்ட் கட்சிகள் முன்னிலை. இவற்றில் 4 தொகுதிகள் தமிழகத்தில் உள்ளன.
ஆந்திர சட்டமன்ற தேர்தல் தோல்வியை தொடர்ந்து தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு பதவியை ராஜினாமா செய்கிறார்.
தேசிய அளவில் கம்யூனிஸ்ட் கட்சிகள் 5 இடங்களில் முன்னிலை. அவற்றில் 4 தொகுதிகள் தமிழகத்தில் உள்ளன.
பிரதமர் மோடியை மீண்டும் தேர்வு செய்ததற்கு நன்றி தெரிவிப்பதாக மோடியின் தாயார் கூறியுள்ளார்.
37 மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி முன்னிலையில் உள்ளது.
முன்னிலை பெற்ற தொகுதிகளை பொறுத்தளவில் அகில இந்திய அளவில் திமுக 5-வது இடத்தில் உள்ளது.
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 5.30-க்கு முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.
பஞ்சாபில் காங்கிரஸ் முன்னிலை - மொத்தம் உள்ள 13 தொகுதிகளில் காங்கிரஸ் 9, பாஜக கூட்டணி 3, ஆம் ஆத்மி 1 இடத்தில் முன்னிலை
ராஜஸ்தானில் மொத்தம் உள்ள 25 தொகுதிகளில் பாஜக 24-ல் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் ஓரிடத்தில் முன்னிலை
தொடர் பின்னடைவில் ராகுல் காந்தி!
அமேதி தொகுதியில் ராகுல் முந்துகிறார் ஸ்மிருதி இராணி.
ஸ்மிருதி இராணி (பாஜக), 43,033 வாக்குகள் பெற்று முன்னிலை.
ராகுல் காந்தி (காங்.), 38,615 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார்.
மத்திய பிரதேசத்தில் மொத்தம் உள்ள 29 தொகுதிகளில் பாஜக 28 தொகுதிகளில் முன்னிலை
குஜராத்தில் 26 மக்களவை தொகுதிகளில் பாஜக 25 தொகுதிகளில் முன்னிலை
டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளிலும் பாஜக முன்னிலை
உத்தரபிரதேசத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் பாஜக 54, பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கூட்டணி 24, காங்கிரஸ் 2 தொகுதிகளில் முன்னிலை
மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 48 இடங்களில் பாஜக 40 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 7 இடங்களிலும் முன்னிலை
பீகாரில் மொத்தம் உள்ள 40 தொகுதியில் பாஜக 36 தொகுதிகளில் முன்னணி - காங்கிரஸ் கூட்டணி 4 தொகுதிகளில் முன்னணி
ஆம்பூர் இடைத்தேர்தல்
விஸ்வநாதன் (திமுக)- 24,920
ஜோதி ராமலிங்க ராஜா (அதிமுக)- 20,181
வயநாடு தொகுதியில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி முன்னிலை
மேற்கு வங்கத்தில் மொத்தம் 42 தொகுதிகள் உள்ளன. இங்கு திரிணாமூல் காங்கிரஸ் 21 தொகுதிகளிலும், பாஜக 18 தொகுதிகளிலும் முன்னலையில் உள்ளது.
மகாராஷ்டிரா முன்னணி நிலவரம் : பாஜக + சிவசேனா கூட்டணி 39, காங்கிரஸ் கூட்டணி 8, மற்றவை 1
உத்தர பிரதேச முன்னிலை நிலவரம் : பாஜக 52, பகுஜன் சமாஜ் + சமாஜ்வாதி 26, காங்கிரஸ் 2
வயநாடு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
பாஜக கூட்டணி 320-க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
வாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோடி 65 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
தேசிய அளவில் பாஜக 311 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
நாடு முழுவதும் பாஜக கூட்டணி 300-க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
காங்கிரசுக்கு இணையாக பாஜகவை தவிர்த்து மற்ற கட்சிகள் 100 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.
250-க்கும் அதிகமான தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிக்கிறது.
காங்கிரஸ் 100-க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை
ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி முன்னிலை வகிக்கிறார்.
நாடு முழுவதும் 200-க்கும் அதிகமான இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது.
அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இங்கு ராகுல் எதிர்த்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி போட்டியிடுகிறார்.
தேசிய அளவில் காங்கிரஸ், பாஜக அல்லாத கட்சிகள் 60-க்கம் அதிகமான இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
பாஜக 194, காங்கிரஸ் 81 இடங்களில் முன்னிலை வகிக்கிறது
அமேதி தொகுதியில் ராகுல் காந்தி பின்னடைவு
தேசிய அளவில் 270 மக்களவை தொகுதிகளுக்கு முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில் பாஜக 168, காங்கிரஸ் 70,மற்றவை 40 தொகுதிகளில் முன்னிலை.
கேரளாவின் வயநாடு மக்களவை தொகுதியில் ராகுல் காந்தி முன்னிலை வகிக்கிறார்.
பாஜக - 150, காங்கிரஸ் 57 தொகுதிகளில் முன்னிலை
பாஜக 112 - காங்கிரஸ் 42 தொகுதிகளில் முன்னிலை
தேசிய அளவில் பாஜக 90 - காங்கிரஸ் 30-க்கும்அதிகமான இடங்களில் முன்னிலை வகிக்கிறது
அமேதியில் ராகுல் காந்தி - ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி முன்னிலை
தமிழகத்தில் 38 தொகுதிகள் மற்றும் புதுவையில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன.
பாஜக - 6, காங்கிரஸ் -3 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
தபாலில் பதிவான வாக்குகள் முதல்கட்டமாக எண்ணப்படுகிறது.
பாஜக 437 தொகுதிகளிலும், காங்கிரஸ் 421 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுடன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை தொடங்கியது
தேர்தல் முடிவுள் இன்று வெளியாகும் நிலையில் அடுத்த பிரதமர் யார் #NextPm என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.
தேசிய ஊடகங்களில் வெளியான கருத்துக் கணிப்பு முடிவுகள் பாஜக குறைந்தது 300 இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவிக்கின்றன.
சோதனைக்கு பின்னர் தேர்தல் முகவர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் காலை 8 மணிக்கு எண்ணப்படுகின்றன.