Read in English
This Article is From May 23, 2019

Election Results 2019: காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி ராஜினாமா?!!- Live Updates

2019 Election Results Updates: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் பாஜக ஆட்சிக்கு வரும் என்கின்றன.

Advertisement
இந்தியா Posted by

Lok Sabha Election Results 2019: 542 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடக்கிறது

ஏப்ரல் 11 முதல் மே 19 வரை ஏழு கட்டங்களாக 17வது மக்களவை தேர்தல்  நடைபெற்றது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்புகள் பாஜகவிற்கு ஆதரவாகவே உள்ளது. கருத்துகணிப்புகளை நம்ப வேண்டாம் என காங்கிரஸ் கட்சி கேட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் குறித்த லைவ் அப்டேட்ஸை இந்த தளத்தில் காணலாம்...

May 23, 2019 20:26 (IST)
''நடுத்தர குடும்பத்தினர் திருப்தி அடைந்ததுதான் எங்களது தேர்தல் வெற்றியி பிரதிபலிக்கிறது. ஒருபோதும் நான் தளர்வடையவில்லை. பிரதமர் ஆனது முதல் நான் பல தடைகளை கடந்துள்ளேன்.'' - பிரதமர் மோடி

May 23, 2019 19:55 (IST)
 à®•à®°à¯à®¨à®¾à®Ÿà®•à®¾à®µà®¿à®²à¯ முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதா தளத்தின் தலைவருமான தேவகவுடா தும்கூர் மக்களவை தொகுதியில் 13,339 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் பசவராஜிடம் தோல்வி அடைந்துள்ளார். 

May 23, 2019 19:07 (IST)
39 ஆண்டுகளுக்கு பின்னர் சேலத்தில் வெற்றி பெற்ற திமுக!!

1980-ல் திமுக வெற்றி பெற்றது. இதன்பின்னர் காங்கிரஸ், அதிமுக கட்சிகள் மாறி மாறி வெற்றி பெற்றுவந்த நிலையில் தற்போது திமுக வேட்பாளர் எஸ்.ஆர். பார்த்திபன் வெற்றி பெற்றுள்ளார். இங்கு அவர் 4,84,658 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் சரவணன் 3,63,813 வாக்குகளும் பெற்றனர். 

May 23, 2019 19:01 (IST)
மோடிக்கு ப.சிதம்பரம் வாழ்த்து!!

மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பதிவில், ''நாடாளுமன்றத் தேர்தலில் மிகச் சிறப்பான வெற்றியைப் பெற்ற திரு நரேந்திர மோடி மற்றும் பாஜக ஆகியவர்களுக்கு என்னுடைய மனம் நிறைந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். உயர்ந்த பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்கள் நல்வாழ்வு ஆகியவற்றுக்கு அவர்கள் பாடுபட என்னுடைய நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.


May 23, 2019 18:52 (IST)
தேர்தல் வெற்றிக்கு பின்னர் சவுக்கிதார் அடைமொழியை பாஜக தலைவர்கள் சமூக வலைதள அக்கவுன்டுகளில் நீக்கி வருகின்றனர். 

Advertisement
May 23, 2019 18:50 (IST)
முன்னணி நிலவரம் - பாஜக 345, காங்கிரஸ் 92, மற்றவை 105
May 23, 2019 18:38 (IST)
தேர்தல் வெற்றிக்கு பின்னர் பாஜக தலைவர்கள் சமூக வலைதளங்களில் தங்களது பெயருக்கு முன்பிருந்த சவுக்கிதார் அடைமொழியை நீக்கி வருகின்றனர்.
May 23, 2019 17:25 (IST)
மோடிக்கு பாக். பிரதமர் வாழ்த்து!!

பிரதமர் நரேந்திர மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், தெற்காசியாவில் வளமும், வளர்ச்சியையும் ஏற்படுத்துவதற்கு பிரதமர் மோடியுடன் இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்கி உள்ளதாக கூறியுள்ளார். 

May 23, 2019 17:07 (IST)
May 23, 2019 16:46 (IST)

4 மாநிலங்களில் பாஜக முழு வெற்றி!


மத்திய à®ªà®¿à®°à®¤à¯‡à®šà®®à¯à®®à®•à®¾à®°à®¾à®·à¯à®Ÿà®¿à®°à®¾à®°à®¾à®œà®¸à¯à®¤à®¾à®©à¯ à®®à®±à¯à®±à¯à®®à¯ à®Ÿà¯†à®²à¯à®²à®¿à®¯à®¿à®²à¯ à®‰à®³à¯à®³ à®…னைத்து à®¨à®¾à®Ÿà®¾à®³à¯à®®à®©à¯à®±à®¤à¯à®¤à¯Šà®•à¯à®¤à®¿à®•à®³à®¿à®²à¯à®®à¯ à®ªà®¾à®œà®• à®µà¯†à®±à¯à®±à®¿ à®ªà¯†à®±à¯à®±à¯à®³à¯à®³à®¤à¯. 

May 23, 2019 16:35 (IST)
ராகுல் காந்தி வெற்றி!

கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதியில் ராகல் காந்தி வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 12,76, 945 வாக்குகளை பெற்ற ராகுல் காந்தி வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

May 23, 2019 16:16 (IST)
8 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் முன்னிலை!!

கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதியில் போட்டியிட்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 8 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். 



May 23, 2019 15:54 (IST)
மோடி வாழ்த்து!

ஆந்திர சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுக்கும், அதன் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டிக்கும் பிரதமர் மோடி வாழ்த்து கூறியுள்ளார். 

May 23, 2019 15:47 (IST)
தேசிய அளிவில் பாஜக பெருவாரியான இடங்களில் முன்னிலை பெற்ற நிலையில் பாஜக அலுவலகத்திற்கு கட்சி தலைவர் அமித் ஷா வருகை தந்துள்ளார். 

May 23, 2019 15:41 (IST)
7.90 லட்சம் வாக்குகள் பெற்ற ராகுல்!!

கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 7 லட்சத்து 90 ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ளார். 

May 23, 2019 15:29 (IST)
வென்றார் மோடி!!

வாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 3.85 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மோடி வெற்றி பெற்றுள்ளார். 

May 23, 2019 15:28 (IST)
மொத்தம் 344 தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலை வகிக்கிறது.
May 23, 2019 15:16 (IST)
வரும் 26-ம்தேதி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்கிறார் பிரதமர் மோடி. 


May 23, 2019 15:07 (IST)
''இந்தியா மீண்டும் வெற்றி பெற்றது'' : மோடி

மக்களவை தேர்தலில் பாஜக 330-க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை பெற்றுள்ள நிலையில் பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார். அவர் தனது ட்வீட் பதிவில், ''ஒன்றாக வளர்வோம், ஒன்றாக வளர்ச்சி பெறுவோம், ஒன்றிணைந்து வலிமை மிக்க இந்தியாவை உருவாக்குவோம். இந்தியா மீண்டும்வெற்றி பெற்றுள்ளது''  என்று கூறியுள்ளார். 



May 23, 2019 14:58 (IST)
“வெல் டன் நண்பா”
நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியை நோக்கி பாஜக பயணிக்கும் நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, பிரதமர் நரேந்திர மோடியை வாழ்த்தியுள்ளார்.





Advertisement