Read in English
This Article is From May 15, 2019

மக்களவை தேர்தல் இறுதி முடிவுகள் மே 24-ம்தேதி வெளிவரவே அதிக வாய்ப்பு! விவரம் உள்ளே!!

தவிர்க்க முடியாத காரணங்களால் மக்களவை தேர்தல் முடிவுகள் மே 23-ம்தேதி மாலை அல்லது மே 24-ம்தேதி காலையே வெளி வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

Advertisement
இந்தியா Edited by ,

விவிபாட் எந்திரங்களை சரிபார்க்கும் பணி மே 23-ம்தேதி நடைபெறுகிறது.

New Delhi:

மக்களவை தேர்தல் இறுதி முடிவுகள் மே 23-ம்தேதி மாலைக்குள் தெரியவர இந்த முறை வாய்ப்பில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தவிர்க்க முடியாத காரணங்களால் மே 24-ம்தேதி காலையே வெளிவருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. 

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பயன்படுத்தி தேர்தல் நடைபெற்று வரும் அதில் முறைகேடுகள் செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக பல வழக்குகள் தொடரப்பட்டு அவை மொத்தமாக உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.

இதன் முடிவில் மக்களவை தேர்தலின்போது தொகுதி ஒன்றுக்கு ஒரேயொரு விவிபாட் எந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு பதிலாக சட்டமன்றம் வாரியாக ஒவ்வொரு விவிபாட் எந்திரங்களை சரிபார்க்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. 

இதையடுத்து தேர்தல் முடிவுகள் வெளியாகும் மே 23-ம்தேதியன்று விவிபாட் எந்திரங்கள் எண்ணப்படவுள்ளன. இதற்கு இந்திய துணை தேர்தல் ஆணையர் சுதீப் ஜெய்ன் பொறுப்பாளராக உள்ளார். அவர் NDTV-க்கு அளித்த பேட்டியில் கூறியதாவது-
ஒரு விவிபாட் எந்திரத்தில் பதிவான வாக்குகளை சரிபார்ப்பதற்கு சராசரியாக ஒரு மணிநேரம் தேவைப்படும். முன்பு ஒரேயொரு எந்திரத்தை மட்டும்தான் சரிபார்த்தோம். தற்போது கூடுதலாக 4 எந்திரங்களை சரிபார்க்க வேண்டியுள்ளது. இதற்கு கூடுதலாக 4 மணி நேரம் ஆகும். எனவே மக்களவை தேர்தல் முடிவுகள் மே 23-ம்தேதி மாலை அல்லது மே 24 காலையில்தான் தெரியவரும். வாக்குப்பதிவு மற்றும் விவிபாட் எந்திரங்களில் முறைகேடு ஏதும் செய்ய முடியாது என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம். 

Advertisement

இவ்வாறு அவர் தெரிவித்தார். விவிபாட் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்தபோது ஏப்ரல் 8-ம்தேதி 23 எதிர்க்கட்சிகள் கோரிக்கை ஒன்றை வைத்தன. அதாவது 25 சதவீத விபிபாட் எந்திரங்களை எண்ண வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதனை ஏற்க மறுத்த தேர்தல் ஆணையம், அவ்வாறு செய்தால் தேர்தல் முடிவுகள் 5 நாட்கள் தாமதமாகத்தான் வெளி வரும் என்று தெரிவித்தது. 
 

Advertisement