சில தலைவர்கள் இதனை தற்காலிக பின்னடைவாக கருதுகின்றனர்
Kolkata:
மேற்கு வங்கத்தில் பாஜக, இந்த முறை கணிசமான இடங்களைக் கைப்பற்றியுள்ளது. மம்தா பானர்ஜி தலைமையிலான ஆளும் திரிணாமூல் காங்கிரஸுக்குத் தேர்தல் முடிவு பேரதிர்ச்சியாக வந்துள்ளது. இதனால் மம்தா பானர்ஜி கட்சி தலைவர்கள் மற்றும் அனைத்துக் கட்சி வேட்பாளர்களைக் கூட்டி மாலை 3.30 மணியளவில் சந்திப்பு நடத்தவுள்ளார்.
மம்தா பானர்ஜி தேர்தல் முடிவுக்குப் பின் தன் கருத்தினை கவிதையாக எழுதி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலை முன்னிட்டு திரிணாமூல் காங்கிரஸின் செயல் திறன் எங்கு குறைந்தது என்பதை தெரிந்து கொள்ள கூட்டம் நடத்தவுள்ளார்.
சில தலைவர்கள் இதனை தற்காலிக பின்னடைவாக கருதுகின்றனர். நடந்து முடிந்த தேர்தலில் திரிணாமுல் 22 இடங்களையும் பாஜக 18 இடத்தினையும் பெற்றுள்ளது. வாக்கு சதவீத விகிதத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 43.28 சதவீதமும் பாஜக 40.25 சதவீதமும் பெற்றுள்ளது. இடதுசாரிகள் பாஜகவிடமிருந்து பணம் வாங்கி விட்டன என்று நகர்ப்புற விவகார அமைச்சர் ஃபர்ஹத் ஹகிம் தெரிவித்தார்.
இந்த குற்றச்சாட்டை சிபிஎம் வேட்பாளர் பங்குரா மறுத்துள்ளார். ஓட்டுக்காக யாரிடமும் பணம் வாங்கவில்லை.திரிணாமூல் எங்களை சித்திரவதை செய்தது. திரிணாமூலிடமிருந்து தப்பிக்க பாஜகவிற்கு வாக்களித்ததாக தெரிவித்துள்ளார்.
மம்தா, தனது ட்விட்டர் பக்கத்தில் வங்கம், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் ‘நான் ஏற்றுக் கொள்ளவில்லை' என்ற கவிதைப் பதிவிட்டுள்ளார். அதில் அவர், “மதவாதத்தைப் பரப்புவதும், மதவெறியைத் தூண்டுவதிலும் எனக்கு நம்பிக்கையில்லை” என்று பெயர் குறிப்பிடாமல் சூசகமாக பதிவிட்டுள்ளார்.