Election Results: 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது
நாடு முழுவதும் மொத்தம் 51 சட்டமன்ற தொகுதிகள், 2 மக்களவை தொகுதிகளில் அக்டோபர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 17 மாநிலங்களில் இந்த இடைத் தேர்தல் நடைபெற்றது. இடைத்தேர்தல் நடைபெறும் 51 தொகுதிகளில் 30 தொகுதிகள் பாஜக வசமும், 11 தொகுதிகள் காங்கிரசிடமும், மற்ற தொகுதிகள் மாநில கட்சிகளிடம் உள்ளன.
புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான் குமார் வெற்றி பெற்றுள்ளார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரனை விட 7,170 வாக்குகள் அதிகம் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் ஜான் குமார் வெற்றி பெற்றுள்ளார். புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான் குமார் 14, 782 வாக்குகளைப் பெற்றார்.