Election Results Live Updates: இடைத்தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்படுகின்றன.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் 44 ஆயிரத்து 782 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவர் இந்த தேர்தலில் மொத்தம் 1,13,428 வாக்குகளை பெற்றிருக்கிறார். அதேபோல நாங்குநேரி இடைத் தேர்தலில், அதிமுக-வின், நாராயணன், 33445 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியடைந்துள்ளார்.
நாடு முழுவதும் மொத்தம் 51 சட்டமன்ற தொகுதிகள், 2 மக்களவை தொகுதிகளில் அக்டோபர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 17 மாநிலங்களில் இந்த இடைத் தேர்தல் நடைபெற்றது. இடைத்தேர்தல் நடைபெறும் 51 தொகுதிகளில் 30 தொகுதிகள் பாஜக வசமும், 11 தொகுதிகள் காங்கிரசிடமும், மற்ற தொகுதிகள் மாநில கட்சிகளிடம் உள்ளன.
அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 11 தொகுதிகள், குஜராத்தில் 6, கேரளா மற்றும் பீகாரில் தலா 5, அசாம் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் தலா 4, சிக்கிம் மற்றும் இமாசல பிரதேசத்தில் தலா 3, தமிழ்நாடு மற்றும் ராஜஸ்தானில் தலா 2, அருணாசல பிரதேசம், மத்திய பிரதேசம், ஒடிசா, சட்டீஸ்கர்,புதுச்சேரி, மேகாலயா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் தலா ஒரு தொகுதியிலும் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டன.
இதனைத் தவிர்த்து மகாராஷ்டிராவின் சதாரா மற்றும் பீகாரின் சமஸ்திபூர் மக்களவை தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலுக்கான முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டு வருகிறது.
நாங்குநேரி இடைத் தேர்தல் இறுதி நிலவரம்!
அதிமுக (நாராயணன்) - 95,360
காங்கிரஸ் (ரூபி மனோகரன்) - 61,913
வித்தியாசம் - 33,445
விக்கிரவாண்டி இடைத் தேர்தல் இறுதி நிலவரம்!
அதிமுக (முத்தமிழ்செல்வன்) - 1,13,745
திமுக (புகழேந்தி) - 68,828
வித்தியாசம் - 44,924
நாங்நேரியிலும் அதிமுக வெற்றி!
நாங்குநேரி இடைத் தேர்தலில், அதிமுக-வின், நாராயணன், 33445 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியடைந்துள்ளார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் 44 ஆயிரத்து 782 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவர் இந்த தேர்தலில் மொத்தம் 1,13,428 வாக்குகளை பெற்றிருக்கிறார்.
விக்ரவாண்டி தொகுதியில் அதிமுகவின் வெற்றி உறுதியாகியுள்ளது. இன்னும் சுமார் 25 ஆயிரம் வாக்குகள் எண்ணப்பட வேண்டியுள்ள நிலையில், அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வனின் வாக்கு வித்தியாசம் 40 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் நாராயணன் தன்னை எதிர்த்து போட்டியிட்டுள்ள காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை விட 8,763 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.
விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுகவின் முத்தமிழ்ச்செல்வன் 70,726 வாக்குளை பெற்றுள்ளார். திமுக வேட்பாளரை விட அவர் 28 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
காங்கிரஸ் ஆட்சியின் மீது நம்பிக்கை வைத்து புதுவையின் காமராஜ் தொகுதியில் கட்சியை வெற்றி பெறச் செய்துள்ளனர் என்று, புதுவை முதல்வர் நாராயண சாமி கூறியுள்ளார்.
தமிழகத்தின் நாங்குநேரி, விக்ரவாண்டி 2 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் முன்னிலை வகிக்கின்றனர்.
விக்கிரவாண்டி தொகுதி 2-வது சுற்று முடிவு : அதிமுக - 11,382 வாக்குகளும், திமுக - 6,938 வாக்குகளும், நாம் தமிழர் - 102 வாக்குளும் பெற்றுள்ளன.
புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான் குமார் 14, 782 வாக்குகளைப் பெற்றார்.
தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரனை விட 7,171 வாக்குகள் அதிகம் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் ஜான் குமார் வெற்றி பெற்றுள்ளார்.
புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான் குமார் வெற்றி பெற்றுள்ளார்.
நாங்குநேரி, விக்ரவாண்டி தொகுதிகளில் திமுக - காங்கிரஸ் கூட்டணி பின்னடைவை சந்தித்துள்ளது.
விக்ரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் முன்னிலையில் உள்ளார்.
விக்ரவாண்டியில் பதிவான வாக்குகள் 30 நிமிடங்கள் தாமதமாக எண்ணப்படத் தொடங்கியது.
வாக்குப்பதிவு எந்திரங்கள் இன்னும் எடுக்கப்படாததால் விக்ரவாண்டி தொகுதியில் வாக்குகளை எண்ணும் பணி தாமதம் ஏற்பட்டுள்ளது.
புதுவை காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல் முடிவு : காங்கிரஸ் வேட்பாளர் ஜான் குமார் முன்னிலையில் உள்ளார்.
8 மணி முதல் 8.30 மணி வரையில் தபாலில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன.
இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.
விக்ரவாண்டி தொகுதியில் அதிமுக சார்பாக முத்தமிழ்ச்செல்வன், திமுக தரப்பில் புகழேந்தி, நாம் தமிழர் கட்சி சார்பாக கந்தசாமி உள்பட 12 பேர் போட்டியிட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக உறுப்பினர் ராதாமணி உடல்நலக்குறைவால் கடந்த ஜூன் 14-ம்தேதி மறைந்தார். இதையடுத்து அங்கு இடைத்தர்தல் நடத்தப்பட்டுள்ளது.
நாங்குநேரியில் அதிமுக சார்பாக ரெட்டியார்பட்டி நாராயணன், திமுக - காங்கிரஸ் கூட்டணி தரப்பில் ரூபி மனோகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் ராஜ்நாராயணன் உள்பட மொத்தம் 23 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர்.
நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த வசந்த குமார், கன்னியாகுமரியில் போட்டியிட்டு எம்.பி. ஆனதை தொடர்ந்து, நாங்குநேரியில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.