This Article is From May 23, 2019

தேர்தல் முடிவுகள்: 5வது முறையாக ஒடிசாவில் வெற்றி பெற்ற நவீன் பட்னாயக்கிற்கு மோடி வாழ்த்து!

பாஜகவின் தென்கனல் வேட்பாளர் ருத்ரா நாராயண் பனி மற்றும் நபரங்ப்பூர் வேட்பாளர் பாலபத்ரா மஜ்ஜி இருவரும் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்.

தேர்தல் முடிவுகள்: 5வது முறையாக ஒடிசாவில் வெற்றி பெற்ற நவீன் பட்னாயக்கிற்கு மோடி வாழ்த்து!

பிரதமர் நரேந்திர மோடி, ஓடிசா மாநிலத்தில் ஐந்தாவது முறையாக வெற்றி பெற்றுள்ள நவீன் பட்னாயக்கிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

New Delhi:

பிரதமர் நரேந்திர மோடி, ஓடிசா மாநிலத்தில் ஐந்தாவது முறையாக வெற்றி பெற்றுள்ள நவீன் பட்னாயக்கிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். "இன்னொரு முறை வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள் நவீன் பாபு. அடுத்த காலத்துக்கும் வாழ்த்துக்கள்" என்று மோடி டிவிட் செய்துள்ளார்.

ஒடிசா மாநிலத்தில் 21 இடத்தில் 7 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது பாஜக. மாநிலத்தில் ஆளும் பிஜு ஜனதா தளம் (பி.ஜே.டி) 14 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

2014ம் ஆண்டு பாஜக ஒரு இடத்தில் மட்டும் தான் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜகவின் தென்கனல் வேட்பாளர் ருத்ரா நாராயண் பனி மற்றும் நபரங்ப்பூர் வேட்பாளர் பாலபத்ரா மஜ்ஜி இருவரும் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். பாஜக வேட்பாளர் அப்ரஜிதா சராங்கியும் புபனேஷ்வரில் முன்னிலை வகிக்கிறார்.

பி.ஜே.டி கட்சியின் வேட்பாளர் பிரமிளா பிசாய் முன்னிலை வகிக்கிறார்.

பி.ஜே.டி கட்சியின் பினாகி மிஷ்ரா, பாஜக செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ராவை வீழ்த்தி முன்னிலை வகிக்கிறார்.

பி.ஜே.டி கட்சியின் பர்த்ருஹரி கதாக்கில் முன்னிலை. பி.ஜே.டியின் கலிக்கேஷ் சிங் டியோ பொலாங்கிரில் முன்னிலை வகிக்கிறார்.

மக்களவை தேர்தலில் பி.ஜே.டி 8 இடங்களிலும், பாஜக 4 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது.

பாஜக, மற்ற மாநிலங்களில் முன்னிலை வகிக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணி 300க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும் என்று முன்னமே எதிர்பார்க்கப்படது.

2014ம் ஆண்டு வங்க தேசத்தில் வெறும் இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது பாஜக. கடந்த வருடம் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் தோற்ற பாஜக, இந்த வருடம் வெற்றி பெற்றுள்ளது.

.