Read in English
This Article is From Sep 23, 2019

54 ஆண்டுகளுக்கு பிறகு புதிய எம்.எல்.ஏ.வை தேர்ந்தெடுக்கும் கேரள சட்டமன்ற தொகுதி!!

கேரளாவில் கோட்டயம் மாவட்டம் பளா சட்டமன்ற தொகுதி உறுப்பினராக கேரள காங்கிரசின் கே.எம். மானி கடந்த 1965-ம் ஆண்டு முதல் இருந்து வருகிறார்.

Advertisement
இந்தியா Edited by

பளா சட்டமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

Pala, Kerala:

கேரளாவில் 54 ஆண்டுகளுக்கு பின்னர் பளா சட்டமன்ற தொகுதிக்கு புதிய எம்.எல்.ஏ. தேர்வு செய்யப்பட உள்ளார். இங்கு கடந்த 1965-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 54 ஆண்டுகளாக கேரள காங்கிரசின் கே.எம். மானி எம்.எல்.ஏ.வாக இருந்து வந்தார். 

அவர் மறைந்ததை தொடர்ந்து தற்போது பளா தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு இன்றைக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

காலை 9 மணிக்கு தொடங்கியுள்ள வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் முடிவுக்கு வந்து விடும். வாக்கு எண்ணிக்கை வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. 

மொத்தம் 13 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும், 3 வேட்பாளர்கள் மட்டுமே கவனிக்கப்படுகிறார்கள். தேர்தலில் மானியின் நெருங்கிய உதவியாளர் ஜோஸ் டாம் புள்ளிக்குனேல் காங்கிரஸ் கூட்டணி சார்பாக நிறுத்தப்பட்டுள்ளார். 

Advertisement

கோட்டயம் மாவட்ட தலைவர் ஹரியை பாஜக வேட்பாளராக நிறுத்தியுள்ளது. இடது சாரி கூட்டணி தரப்பில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மானி காப்பன் களம் இறக்கப்பட்டுள்ளார். 

இந்த மூவரில் ஒருவர்தான் வெற்றி பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மூன்று பேரும் தாங்கள் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர். தேர்தல் முடிவு வெள்ளியன்று தெரிந்து விடும். 
 

Advertisement
Advertisement