தேர்தல் முடிவுகள் 24-ம்தேதி வெளியாகிறது.
New Delhi: தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் சட்டமன்ற இடைத்தேர்தல் நடத்தப்பட்டுவரும் வேளையில் அந்த தொகுதிகள் உள்பட நாடு முழுவதும் மொத்தம் 51 சட்டமன்ற தொகுதிகள், 2 மக்களவை தொகுதிகளில் இடைத்தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.
மொத்தம் 17 மாநிலங்களில் இந்த இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இடைத்தேர்தல் நடைபெறும் 51 தொகுதிகளில் 30 தொகுதிகள் பாஜக வசமும், 12 தொகுதிகள் காங்கிரசிடமும், மற்ற தொகுதிகள் மாநில கட்சிகளிடம் உள்ளன.
அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 11 தொகுதிகள், குஜராத்தில் 6, கேரளா மற்றும் பீகாரில் தலா 5, அசாம் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் தலா 4, சிக்கிம் மற்றும் இமாசல பிரதேசத்தில் தலா 3, தமிழ்நாடு மற்றும் ராஜஸ்தானில் தலா 2, அருணாசல பிரதேசம், மத்திய பிரதேசம், ஒடிசா, சட்டீஸ்கர்,புதுச்சேரி, மேகாலயா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் தலா ஒரு தொகுதியிலும் இன்று இடைத்தேர்தல் நடத்தப்படுகின்றன.
இதனைத் தவிர்த்து மகாராஷ்டிராவின் சதாரா மற்றும் பீகாரின் சமஸ்திபூர் மக்களவை தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடைபெறுகிறது. ‘
வாக்கு எண்ணிக்கை 24 –ம்தேதி நடத்தப்பட்டு முடிவுகள் அன்றைய தினமே அறிவிக்கப்படவுள்ளன. இதனைத் தவிர்த்து மகாராஷ்டிரா மற்றும் அரியானாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது.