This Article is From May 23, 2019

Election Result 2019: நாளின் கடைசியில் தான் விவிபாட் ஒப்புகை சீட்டுடன் ஒப்பிட்டு பார்க்கப்படும்

543 தொகுதிகளில் 542 தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. வேலூரில் மட்டும் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது

Election Result 2019: நாளின் கடைசியில் தான் விவிபாட் ஒப்புகை சீட்டுடன் ஒப்பிட்டு பார்க்கப்படும்

முதல் முறையாக விவிபாட் ஒப்புகை சீட்டுடன் ஒப்பிடப்படவுள்ளது.

New Delhi:

நாடாளுமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்குகிறது. 8,000 வேட்பாளர்கள் 542 தொகுதிகளில் போட்டியிட்டனர். 

முதன் முறையாக விவிபாட் ஒப்புகைச் சீட்டுடன் சரிபார்க்கப் பட்டு தேர்தல் முடிவுகள் வெளிவரவுள்ளது. 90.99 கோடி வாக்காளர்களில் 67.11 சதவீத வாக்குகள் ஏழு கட்ட தேர்தலில் பதிவாகியுள்ளது. இது இந்திய பாராளுமன்ற தேர்தலில் மிக அதிகமான வாக்குபதிவு நடந்த தேர்தல் ஆகும் . 

விவிபாட் ஒப்புகை சீட்டுடன் தொகுதிக்கு 5 வாக்கு சாவடிகளில் மட்டும் சரிபார்க்கப்படவுள்ளது. ராணுவத்தினர், மத்திய காவல் படை, காவல்துறையினர் என பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். ஒப்புகைச் சீட்டுடன் ஒப்பிட்டு வழங்கப்படும் வாக்கு எண்ணிக்கை நாளின் கடைசியில் அறிவிக்கப்படும். 

தபால் வாக்குகள் எண்ணும் போதே மின்னணு வாக்கு எந்திரங்களின் வாக்குகளையும் கணக்கிடும் பணி ஒரே நேரத்தில் தொடக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. ஏனென்றால் சர்வீஸ் வாக்குகள் எனப்படும் ராணுவம், துணை ராணுவம், போலீஸார் ஆகியோரி வாக்குகள் இந்த முறை 16 லட்சத்தை தாண்டும் என்பதால் ஒரே நேரத்தில் நடக்க இருக்கிறது. 

543 தொகுதிகளில் 542 தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. வேலூரில் மட்டும் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

பிரதமர் நரேந்திர மோடி, பல மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் இந்த தேர்தலில் போட்டியிட்டுள்ளனர்.

.