Bengaluru: முன்னாள் இந்திய குடியரசு தலைவரான சர்வபள்ளி ராதாகிருஷ்னனின் பேரன் சுப்பிரமணியம் ஷர்மா ஜி கர்னாடக பாஜக கட்சியுடன் இன்று இணையவுள்ளார்.
கர்னாடக பாஜக தலைவரான பிஎஸ் யெடியுரப்பா தலைமையில் குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் நிறைவடைந்தவுடன் இணைவதாக தகவல் வெளியாகவுள்ளது.நாட்டில் உள்ள சமத்துவமின்மையை அளிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் அரசியலில் களமிறங்கியிறுக்கும் 44 வயதான சுப்பிரமணியம் ஷர்மா ஜி 2018-ல் கர்னாடகாவில் உள்ள மலேஸ்வரம் சட்டமன்ற தொகுதியில் அகில இந்திய மகிளா முன்னேற கட்சிகாக போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
‘செல்வந்தர்களிக்கும் ஏளைகளுக்கிடையே உள்ள வேறுபாடு நீண்டுகொண்டே போகிறது. இதை சரிசெய்ய யாராவது அமைப்புக்குள் வந்து செயல்பட்டு சமத்துவத்தை உறுதிசெய்ய வேண்டும்' என 2018 போட்டியிட்டபோது சுப்பிரமணியம் ஷர்மா கூரியது குறிப்பிடத்தக்கது.
சுப்பிரமணியன் ஷ்ரமாவின் தந்தைக்கு சொந்தமான சுதீக்க்ஷா குழுமம், பார்மா, கட்டுமானம், பால் உற்பத்தி போன்ற பல வணிங்களில் ஈடுபட்டு வந்த நிலையில், 2006 ஆம் ஆண்டு சுப்பிரமணியத்தின் குடும்பத்தினர் சென்னையில் இருந்து பெங்களூருக்கு குடிபெயர்ந்தனர் என்பது குறிப்படத்தக்கது.
‘நான் பெரும்பாலும் கற்பித்தலில் ஈடுபட்டுள்ள குடும்பத்தை சேர்ந்தவன், அரசியல் பின்னனியில் இருந்து வந்தவன் இல்லை' என சுப்பிரமணியம் ஷர்மா கூரிய நிலையில் அவரின் தாத்தா டாக்டர் ராதாகிருஷ்னன் இந்தியாவின் இரண்டாவது குடியரசு தலைவராக 1962 முதல் 1967 வரை பதவியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சுப்பிரமணியம் ஷர்மாவுக்கும் வி.வி கிரி, இந்தியாவின் நான்காவது குடியரசு தலைவரும் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
பல ஆண்டுகளாக சுயதொழில்களில் ஈடுபட்டு இருந்த ஷர்மாவுக்கு சமுதாயத்தில் உள்ள கல்வி, மருத்துவம் மற்றும் வேலையின்மை போன்ற இன்னல்களுக்கு திர்வு கொண்டு வரவேண்டும் என்பதே அவரது நோக்கமாக இருக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)