This Article is From May 13, 2019

ரம்ஜான் நோன்பையொட்டி வாக்குப்பதிவை காலை 5.30-க்கு தொடங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!!

மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 6 கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில் நாடு 7-வது கட்ட தேர்தலை எதிர்நோக்கியுள்ளது.

Advertisement
இந்தியா Edited by

காலை 7 மணிக்கு பதிலாக 5.30-க்கு வாக்குப்பதிவை தொடங்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

New Delhi:

ரம்ஜான் நோன்பை முன்னிட்டு 7-வது கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவை காலை 5.30-க்கு தொடங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. 6 கட்டமாக வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில் நாடு 7-வது கட்ட தேர்தலை எதிர்நோக்கி உள்ளது. 

மே 19-ம்தேதி நடைபெறும் 7-ம் கட்ட வாக்குப்பதிவு 59 தொகுதிகளில் நடக்கிறது. இந்த தொகுதிகள் பீகார், இமாச்சல பிரதேசம், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், பஞ்சாப், உத்தர பிரதேசம்,  மேற்கு வங்கம், சண்டிகர் ஆகிய மாநிலங்களில் வருகின்றன. 

இதற்கிடையே முஸ்லிம்களின் ரம்ஜான் நோன்பு தொடங்கியுள்ளதால், 7-ம் கட்ட வாக்குப்பதிவு நேரத்தை முன்கூட்டியே தொடங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் முகமது நிஜாமுதீன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். 

Advertisement

இந்த வழக்கு இந்திரா பானர்ஜி, சஞ்சிவ் கன்னா ஆகியோர் அடங்கிய விடுமுறைக்கால நீதிபதிகள் அமர்வு விசாரித்தது. அப்போது, தேர்லை முன்கூட்டியே நடத்தினால், வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு செல்வது, அதிகாரிகளை நியமிப்பது உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் ஏற்படும். 7 மணிக்கு வாக்குப்பதிவை ஆரம்பித்தாலே, வாக்காளர்களால் தங்களது வாக்கை பதிவு செய்ய முடியும் என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர். 

Advertisement