This Article is From Apr 12, 2019

அரசியல் கட்சிகளுக்கு வரும் நிதி; உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

தேர்தல் நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

அரசியல் கட்சிகளுக்கு வரும் நிதி; உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

அரசியல் கட்சிகள் கொடுக்கும் விவரங்கள் சீல் வைக்கப்பட்ட கவரில் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவாதம் அளித்துள்ளது. 

New Delhi:

தேர்தல் நிதி பத்திரம் மூலம் அரசியல் கட்சிகளுக்கு வரும் நிதியை நிறுத்த முடியாத என்றும், அதே நேரத்தில் நிதி எங்கிருந்து வருகிறது என்கின்ற விவரத்தை மே 30 ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் அரசியல் கட்சிகள் சமர்பிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசியல் கட்சிகள் கொடுக்கும் விவரங்கள் சீல் வைக்கப்பட்ட கவரில் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவாதம் அளித்துள்ளது. 

தேர்தல் நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்றும், ஆகவே தேர்தல் பத்திர நடைமுறை நிறுத்தப்பட வேண்டும் என்றும் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம், ‘இந்த விவகாரம் குறித்து உடனடியாக முடிவெடுக்க முடியாது. இது குறித்து தீவிர விசாரணைத் தேவை. அதே நேரத்தில் இவ்விவகாரத்தில் இடைக்கால நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் உத்தரவிட்டுள்ளோம்' என்று தெரிவித்துள்ளது. 
 

.