This Article is From Jan 23, 2019

''வாக்குப்பதிவு எந்திரத்தில் எந்த குறையும் இல்லை'' - நிதிஷ் குமார் பேச்சு

வாக்களித்ததை உறுதி செய்யும் சீட்டை தேர்தல் ஆணையம் வழங்கி வருகிறது. அதில் எந்த தில்லு முல்லும் செய்ய முடியாது என்று நிதிஷ் கூறியுள்ளார்.

''வாக்குப்பதிவு எந்திரத்தில் எந்த குறையும் இல்லை'' - நிதிஷ் குமார் பேச்சு

வாக்குப்பதிவு எந்திரத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

Patna:

வாக்குப்பதிவு எந்திரத்தில் எந்த குறையும் இல்லை என்றும், அதில் தில்லுமுல்லு நடப்பதற்கான வாய்ப்பே இல்லை என்றும் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கூறியுள்ளார். 

வாக்குப்பதிவு எந்திரத்தை பயன்படுத்தி தேர்தல் நடத்தக் கூடாது என்பதில் எதிர்க்கட்சிகள் பிடிவாதமாக உள்ளன. இதுகுறித்து பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அளித்த பேட்டியில் கூறியதாவது-

வாக்குப்பதிவு எந்திரத்தை பொறுத்த வரையில் எனது நிலைப்பாட்டில் தெளிவாக இருக்கிறேன். அதில் எந்த குறையும் இல்லை. நன்றாக செயல்படுகிறது. அதனை நீக்கிவிட்டு தேர்தல் நடத்த வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். அதனை நான் ஏற்கவில்லை. 

வாக்குப்பதிவு உறுதிச் சீட்டை தேர்தல் ஆணையம் வாக்காளர்களுக்கு வாங்குகிறது. எனவே தில்லுமுல்லு நடக்க வாய்ப்பில்லை. மக்களின் வாக்குரிமையை வாக்குப்பதிவு எந்திரங்கள் வலிமைப்படுத்தும் வகையில் உள்ளன. 

இவ்வாறு நிதிஷ் குமார் கூறினார். 
 

.