இந்த சம்பவத்திற்கு பின் யானையை வனத்துறை அதிகாரிகள் பாகனின் உதவியுடன் கட்டுக்குள் கொண்டு வந்தார்கள்.
Yavatmal: யாவட்டமால்: மகாராஷ்டிரா மாநிலம், யாவட்டாமல் மாவட்டத்தை சேர்ந்த 30 வயது பெண் யானையால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை அன்று பெண்ணைக் கொன்ற பின், கிராமத்திற்குள் நுழைந்த அதே யானை 72 வயதுடைய முதியவர் ஒருவரையும் தாக்கி சென்றதாக தெரியவந்துள்ளது.
மாட்டு சாணம் எடுக்கச்சென்ற போது காட்டு யானைத் தாக்கி சம்பவ இடத்திலேயே அர்ச்சனா உயிரிழந்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து, யானையை வனத்துறை அதிகாரிகள் பாகனின் உதவியுடன் கட்டுக்குள் கொண்டு வந்தார்கள்.