This Article is From Nov 11, 2019

பீகாரில் விஷம் வைத்து கொல்லப்பட்ட யானை

கால்நடை மருத்துவர்கள் குழு யானையின் பிரேத பரிசோதனை நடத்தும் என்று பெகுசராய் வனத்துறை அலுவலர் சஞ்சய் குமார் சின்ஹா தெரிவித்தார்.

பீகாரில் விஷம் வைத்து கொல்லப்பட்ட யானை

யானை வனத்துறை அதிகாரிகளின் மேற்பார்வையில் அடக்கம் செய்யப்படும்.

Begusarai, Bihar:

பீகார் மாநிலம் பெகுசராய் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை விஷம் வைத்து யானை ஒன்று கொல்லப்பட்டிருந்தது.

 யானை பாகன் முகம்மது மக்சத் என்பவர் முகமது ஷம்ஷாத் மற்றும் முகமது நிஷாத் ஆகியோருக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளார்.  இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக யானை பேச்சிடெர்முக்கு விஷம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்று மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த யானை தாஜ்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்திற்கு சொந்தமானது. இந்த வழக்கில் விசாரணை நடந்து வருகிறது. 

கால்நடை மருத்துவர்கள் குழு யானையின்  பிரேத பரிசோதனை நடத்தும் என்று பெகுசராய் வனத்துறை அலுவலர் சஞ்சய் குமார் சின்ஹா தெரிவித்தார். 

யானை வனத்துறை அதிகாரிகளின் மேற்பார்வையில் அடக்கம் செய்யப்படும். 

.