சாண்டாகிளாஸ் போல் வேடமிட்ட யானை
தாய்லாந்தில் உள்ள பள்ளிக் குழந்தைகள் சாண்டாகிளாஸ் உடையணிந்த யானையிடமிருந்து கிறிஸ்துமஸ் பரிசுகளை பெற்றனர். பாங்காக்கின் வடக்கே உள்ள உள்ள அயுதாயாவில் உள்ள ஜிரசார்ட்வித்தாய பள்ளியி மாணவர்களுக்கான பரிசினை யானையை வைத்து வழங்கி விழாக்கால கொண்டாட்டத்தை தொடங்கினர்.
தி சன் டெயில் செய்தியின்படி, இந்த தனித்துவமான கிறிஸ்மஸ் கொண்டாட்டம் கடந்த 15 ஆண்டுகளாக பள்ளியி பாரம்பரியமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும், சாண்டா யானைகள் குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்குகின்றன. மேலும் சில மாயஜால தந்திரங்களை காட்டி மகிச்சியூட்டுகின்றன.
இந்த ஆண்டு நான்கு பண்டிகை யானைகள் பள்ளிக்கு வருகை தந்தன. அயுதஹாய யானை அரண்மனையின் உரிமையாளர் லார்தொங்டரே மீப்பன் இது குறித்து பேசியபோது “யானைகள் பரிசுகளை வழங்குவது மட்டுமல்ல மாணவர்களும் யானைகளும் ஒன்றாக கிறிஸ்துமஸ் மரத்தை உருவாக்குகிறார்கள்” என தெரிவித்திருந்தார்.
யானையை வைத்து நடன நிகழ்ச்சிகளும் நடத்தினர். மாணவர்களும் உற்சாகமாக பார்த்துள்ளனர். யூரோ நியூஸ் படி, இந்த நிகழ்வு ஆண்டு தோறும் நடக்கு பள்ளியின் சிறப்பான அம்சமாகும். பெளத்த நாடான தாய்லாந்தில் கடந்த வருடம் கூட ஐந்து யானைகள் பள்ளிக்கு வருகை தந்து பொம்மைகளையும் பரிசுகளையும் வழங்கின.
Click for more
trending news